இக்காலத்தின் அடையாளம் New York, New York USA 63-1113 1எல்லாம் கைகூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய் எல்லாம் கைகூடிடும் நம்பிடுவாய். சற்று நேரம் நாம் ஜெபத்திற்காக தலைவணங்குவோம். கிருபை மிகுந்த எங்கள் பரலோகப் பிதாவே, நியூயார்க் பட்டினத்துக்கு வந்து இங்குள்ள உமது ஜனங்களுக்கு உமது நாமத்தினாலே ஊழியம் செய்ய எங்களுக்குக் கிடைத்த இந்த பெறும் பேறுக்காக நாங்கள் இன்றிரவு மிக்க மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். இவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். மகத்தான நாளைய தினம் ஒன்று உண்டென்றும், அங்கு நாங்கள் சந்திப்போமென்றும், அங்கு நாங்கள் வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்ய வேண்டிய அவசியமிராது என்றும், அவர்கள் அங்கு எப்பொழுதும் சுகமாயிருப்பார்கள் என்றும் அறிந்திருக்கிறோம். அங்கு இழக்கப்பட்டவர்களுக்காக நீண்ட இரவு ஜெபம் இராது. ஏனெனில் எல்லோருமே அங்கு இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். இயேசு பிரசன்னமாகும் நாளை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். அந்த நேரம் அருகாமையில் வந்து கொண்டிருப்பதையும், அற்புதங்களும், அடையாளங்களும் அந்த நாளை சுட்டிக் காண்பிக்கின்றன என்பதையும் நாங்கள் காணும்போது, ஆண்டவரே, அது சற்று நேரம் எங்கள் நிலையைக் குறித்து சிந்திக்க வைத்து, நாங்களும், “ஆண்டவரே, எங்களை ஆராய்ந்து பாரும்'' என்று உம்மிடம் கேட்கத் தூண்டுகிறது. எங்களிடம் ஏதாகிலும் தீமை காணப்பட்டால், பிதாவே, அதை அகற்றிவிடும். சுத்த இருதயத்தோடும், சுத்த கைகளோடும் நாங்கள் உமக்கு பணிவிடை செய்ய விரும்புகிறோம். ஏனெனில் எந்த நேரத்தில் நீர் எங்களை அழைத்து, மேலே வரும்படி கட்டளையிடப் போகிறீர் என்று நாங்கள் அறிய மாட்டோம். நீர் அழைக்கும் போது, நாங்கள் வந்து உம்மை சந்திப்போம். ஆண்டவரே, உம்மை அவர்களுடைய இரட்சகராக அறிந்திராத எவராகிலும் இங்கு இருப்பார்களானால்; நீர் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறவர் என்று அவர்கள் அறியாதிருந்து, தேவனுடைய ஆவியினால் அவர்கள் பிறவாமல் இருப்பார்களானால், இன்றிரவு அவர்கள் அந்த தீர்மானம் செய்வார்களாக. தேவனே, உம்முடைய நன்மையினால் அவர்களை நிரப்புவீராக. பிதாவே, இங்குள்ள வியாதியஸ்தர், அவதியுறுபவர் ஒவ்வொருவருக்கும் சுகமளிப்பீராக. இந்த ஆராதனை முடியும்போது, பெலவீனமான ஒருவராவது, அல்லது பாவிகள் ஒருவராவது இக்கட்டிடத்தில் இருக்க வேண்டாம். தேவனுடைய மகிமைக்கென்றும் கனத்திற்கென்றும் இது நிகழ்வதாக. அவருடைய அன்பின் பிள்ளையாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். 2உட்காருங்கள். இன்றிரவு இங்கு வந்து, அழகான இரட்சகரும் எல்லாவற்றிற்கும் போதுமானவருமாயிருப்பவரின் நாமத்தில் மறுபடியும் உங்களுக்கு ஊழியம் செய்வதை மகத்தான சிலாக்கியமாகக் கருதுகிறேன். சென்ற இரவு நாம் கர்த்தருடைய தூதனைக் குறித்தும் சோதோமில் நேர்ந்த அந்த அடையாளத்தைக் குறித்தும் பேசினோம். ஆபிரகாமுடன் பேசுவதற்காக அந்த தூதன் தங்கிவிட்டார். தூதனாகிய இந்த மனிதன் மாமிச ரூபத்திலிருந்த தேவனே. ஏனெனில் ஆபிரகாம் அவரை 'ஆண்டவர்' என்றழைத்தான். வேதாகமம் படிக்கும் எவரும் அந்த 'ஆண்டவர்' தேவனைக் குறிக்கிறது என்றறிவர் (Lord என்னும் அந்த ஆங்கிலச் சொல்லில் பெரிய “ட” உபயோகிக்கப்பட்டிருப்பதால், அது தேவனைக் குறிக்கிறது என்று சகோ. பிரான்ஹாம் கூறுகிறார் - தமிழாக்கியோன்). ''ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.'' அது ஏலோஹிமைக் குறிக்கிறது. அதற்கு, “எல்லாவற்றிற்கும் போதுமானவர், சர்வ வல்லமையுள்ள தேவன்'' என்று அர்த்தம். அங்கு தேவன் மனித ரூபத்தில் ஆபிரகாமுக்கு தம்மை வெளிப்படுத்தினார். அவர் அழுக்கு படிந்த பயணியைப் போல் தோற்றமளித்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று கூறவில்லை. ஆனால் அவர் ஆபிரகாமிடம் உரையாடினபோது, ''நான் இதை செய்தேன், நான் உனக்கு இதை வாக்களித்தேன்'' என்றார். பாருங்கள், அவன் ”தகப்பன்'' பெயராகிய ஆபிரகாம் என்னும் பெயரினால் அவனை அழைத்தார். அதற்கு முன்பு அவன் பெயர் 'ஆபிராம்' என்றிருந்தது. அப்பொழுது அது 'ஆபிரகாம்' என்று மாற்றப்பட்டது. அவ்வாறே 'சாராய்' என்ற பெயரும் 'சாராள்' என்று மாற்றப்பட்டது - “இராஜ குமாரத்தி” பின்பு தேவன் ஆபிரகாமிடமிருந்து மறைந்து சோதோமுக்குச் சென்றபோது, அதுவே முடிவின் அடையாளமாயிருந்தது. அக்கினி வானத்திலிருந்து விழுந்து, சோதோம் கொமோராவையும் சுற்றிலுமிருந்த பட்டினங்களையும் பட்சித்தது. 3புறஜாதிகளின் உலகத்திற்கு என்ன நேரிடும் என்பதற்கு அது முன்னடையாளமாகத் திகழ்கின்றது. அது அக்கினியினால் அழிக்கப்படும், அழிக்கப்படும். இவ்வுலகை இனி தண்ணீரினால் அழிப்பதில்லையென்று தேவன் வாக்களித்து, அதற்கான ஒரு அடையாளத்தையும் நமக்குத் தந்திருக்கிறார். தேவன் அடையாளமின்றி எதையும் செய்வதில்லை. தேவன் இவ்வுலகை இனி ஒரு போதும் தண்ணீரினால் அழிப்பதில்லை என்பதன் அடையாளமாக வானவில்லை உடன்படிக்கையாக நமக்கு கொடுத்திருக்கிறார். இம்முறை அது அக்கினியினால் அழிக்கப்படும். காலங்களைக் குறித்து தேவன் குறிப்பிடும்போது, அவர், “நோவாவின் நாட்களில் பேழை ஆயத்தம் பண்ணப்பட்டபோது, எட்டு பேர் மாத்திரமே தண்ணீரிலிருந்து காக்கப்பட்டனர் (1 பேது. 3:20). மனுஷகுமாரன் வரும்போதும் அப்படியேயிருக்கும்'' என்றார். அங்கிருந்த சிறுபான்மையோரைக் கவனியுங்கள். ”அங்கு எட்டு பேர் மாத்திரமே காக்கப்பட்டனர்.'' அவர் தொடர்ந்து, அக்காலத்தில் காணப்பட்ட நடத்தையை விவரிக்கிறார்: “புசித்து குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள்'' (லூக்.17:27). அப்படியானால்... 4சில நாட்களுக்கு முன்பு அதை நான் படித்து, விவரித்து பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கருத்து எனக்கு உதயமானது. நீங்களும் நானும் படிக்கும் அதே ஆதியாகமம் புத்தகத்தை இயேசுவும் படித்தார். எனவே அக்காலத்தில் அவர்கள் என்ன செய்தனர் என்பதை அறிந்து கொள்ள மீண்டும் ஆதியாகமம் 6ம். ஆதிகாரத்திற்கு சென்றேன். ''தேவகுமாரர்கள் மனுஷ குமாரத்திகளுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்'' (ஆதி. 6:2) என்று நான் கண்டு கொண்டேன். அந்த மொழி பெயர்ப்பை நான் பார்த்த போது, “அவர்கள் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்'' மனைவிகளாக அல்ல. இங்கு நெவாடாவிலுள்ள ரீனோவில் நடப்பது போல் விவாகம் செய்து கொண்டு, விவாகரத்து செய்து கொள்ளுதல்; ஹாலிவுட்டைப் போல். ”இவர்கள் பிரபலம் வாய்ந்த மனிதர்'' என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் லைஃப் பத்திரிகையை படித்திருப்பீர்கள். இங்கிலாந்தில் நேர்ந்த அந்த அவதூறு (Scandal) அதில் எழுதப்பட்டிருந்தது, பிரபலம் வாய்ந்த அந்த மனிதனும் அந்த வேசிகளும். எவ்வாறு நமது ஆளுநர்கள் (governors) ஓ, என்னே! நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம்! என்ன நிகழுமென்று இயேசு கூறினாரோ அதே சூழ்நிலையில், ''புசித்து குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் அதை அறியாமலிருந்தார்கள்''. அதன் பின்பு கதவு அடைக்கப்பட்டது, பிறகு வேறு தருணமேயில்லை. அதுவே நோவாவின் கடைசி பிரசங்கமாயிருந்தது. மகத்தான எந்த ஊழியத்தில் பிரசங்கிக்கப்பட்ட கடைசி பிரசங்கம் எதுவும், இரட்சிக்கப்படக் கூடாதவர்களுக்கே பிரசங்கிக்கப்பட்டது. அவ்வாறே நோவாவின் கடைசி செய்தியும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களுக்கே அளிக்கப்பட்டது. பாருங்கள், அவன் பேழைக்குள் பிரவேசித்தான். அப்பொழுது கதவு அடைக்கப்பட்டது. மழை பெய்வதற்கு ஏழு நாட்கள் முன்பு அவன் பேழைக்குள் நுழைந்தான். பாருங்கள், அவனுடைய செய்தி, முதலாவதாக அவன் பிரசங்கித்தான், பின்பு பேழையை உண்டாக்கினான், அதன் பின்னர் ஏழு நாட்கள் பேழையில் அடைபட்டிருந்தான். ஜனங்கள், “அந்த மூடபக்தி வைராக்கியமுள்ள கிழவன் பேழைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்'' என்றனர். ஆனால் தேவன் தாம் கதவை அடைத்தார். சோதோமிலும் அது போன்றே நிகழ்ந்தது. 5கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பாருங்கள். அவர் இவ்வுலகில் வந்த போது, கலிலேயாவின் இளைய தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் ஜெப ஆலயங்களுக்குச் சென்றார். எல்லோரும் அவரை நேசித்தனர். அவர் பிணியாளிகளை சுகப்படுத்தினார். அதுதான் அவருடைய ஊழியத்தின் முதல் பாகமாயிருந்தது. இரண்டாம் கட்டம், தீர்க்கதரிசனம். அவர், அவருடைய காலத்திலிருந்த பரிசேயரையும் சதுசேயரையும் கடிந்து கொண்டு, அவர்கள் குருடரென்றும், அதன் விளைவாக அவர் யாரென்று காண முடிய வில்லையென்றும், அவர்களுக்கு என்ன நேரிடப் போகிறதென்றும் உரைத்தார். அதன் காரணமாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இதன் அடிப்படையில் அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவர்களால் செய்தியை தடுத்து நிறுத்த முடியவில்லை, நீங்கள் செய்தி கொண்டு வரும் தூதனை தடுத்து நிறுத்தலாம், ஆனால் செய்தியையோ தடுத்து நிறுத்த முடியாது. “அவர் பாதாளத்துக்குச் சென்று, முன்பு கீழ்ப்படியாமலிருந்த காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்'' என்று வேதம் கூறுகின்றது. (1 பேது. 3:19). அங்கு அவருடைய கடைசி செய்தி ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது. 6இக்காலத்தில், நோவாவின் நாட்களில் நடந்தது போலவே, ஜனங்கள் பிரசங்கித்துக் கொண்டேயிருப்பார்கள் என்றும், ஆனால் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்ட உலகிற்கு கதவு ஏற்கனவே அடைபட்டு விட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போது அது பயங்கரமாயுள்ளது. கதவு எப்பொழுது அடைபடுமென்று நமக்குத் தெரியாது. எனவே நீங்கள் கிறிஸ்தவர்களல்லாமல் இருந்தால், இன்றிரவு அதைக் குறித்து சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நமக்கு செய்யத் தெரிந்தது ஒன்றே ஒன்று. அது தான், ''சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.'' (மாற்கு 16:15). என்று நமது ஆண்டவர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கட்டளையைப் பின்பற்றுவதே. யார் இரட்சிக்கப்படுவார்களென்றும், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியும். நமக்குத் தெரியாது. நாம் கடலில் வலையை வீசுகின்றோம். அது எல்லா வகைகளையும் கொண்டு வருகிறது. ஆனால் தேவனுக்கோ யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரியும். ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' (யோவான் 6:44). ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' (யோவான்6:37). அது நமக்குத் தெரியும், பாருங்கள். எனவே இவர் கிறிஸ்தவர் என்றும், அவர் கிறிஸ்தவர் அல்ல என்றும் நாம் சொல்ல முடியாது, ஏனெனில் ''பரலோகராஜ்யம் கடலில் போடப்படும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். (மத், 13:47). வலையை இழுத்த போது, எல்லா வகை கடற்பிராணிகளும் அதில் இருந்தன. அதில் தண்ணீர் சிலந்திகள், பாம்புகள், மீன்கள், தோட்டி மீன்கள், நல்ல மீன்கள் எல்லாமே சிக்கியிருந்தன. தண்ணீர் சிலந்திகள் போன்றவை நகர்ந்து மீண்டும் தண்ணீரை அடைகின்றன. ஆனால் நல்ல மீன்களோ எஜமானுக்கென்று வைக்கப்படுகின்றன. நாம் வலையை வீசுகிறோம், அவ்வளவு தான். 7ஆனால் தண்ணீர் சிலந்தி அதன் மேல் வலை வீசப்பட்டபோதே தண்ணீர் சிலந்தியாக இருந்தது என்பதை ஞாபகம் கொள்ளவும். கூட்டத்தின் ஈர்ப்பு அதை சிக்க வைத்தது. பாம்பு பாம்பாகவே இருந்தது. ஆனால் சுவிசேஷ வலை அதை உள்ளே இழுத்தது. அவ்வாறே தோட்டி மீன் தோட்டி மீனாகவும், ஆமை ஆமையாகவும் இருந்தன. ஆனால் உண்மையான மீன் தொடக்கத்திலேயே மீனாக இருந்தது. எனவே யார் எப்படியென்று அவருக்குத் தெரியும். ஏனெனில் அவர்களுடைய பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட போதே அதில் எழுதப்பட்டுவிட்டன. 8நாம் நமது பணியை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். சகோ. விக் ஒரு மூலையில் அநேக ஆண்டுகளாக வலை வீசிக் கொண்டிருக்கிறார். அது போன்று மற்ற ஊழியக்காரரும் வெவ்வேறு மூலைகளில் தங்கள் வலைகளை வீசிக் கொண்டிருக்கின்றனர். சகோதரர்களாகிய உங்களுடைய வலைகளுடன் என் வலையையும் சேர்த்து பின்னவே நான் இங்கு வந்துள்ளேன். அப்பொழுது அது ஒரு பெரிய வலை வீச்சாகி, நாம் அனைவரும் மீன் பிடிப்பவர்களாக ஒன்று சேர்ந்து, வலையை ஏரியின் மூலைகளிலிருந்து இழுப்போம். ஒரு நாளில் கடைசி மீன் ஏரியிலிருந்து அகப்படும், அப்பொழுது மீன் பிடித்தல் முடிந்துவிடும். அந்த மணி நேரம் நெருங்குவதை நாம் காண்பதால், நமது முழு இருதயத்தோடும் தேவனைத் தேடி, ஜெபம் செய்து, உத்தமமாக இருப்போம். இன்றிரவு நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம், நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகம் செய்வோம். பில்லி கொடுத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து அவனிடம் நான் பேசவில்லை. பில்லி ஜெப அட்டைகளை கொடுத்திருக்கிறானா? ஆம், நல்லது. சரி. 9இன்றிரவு ஜெப ஆராதனைக்காக விசுவாசத்தையூட்டும் ஆராதனை ஒன்றை நேற்றிரவு நடத்த எண்ணியிருந்தோம், ஆனால் ஓரிரு இரவுகள் பிரசங்கம் செய்யலாமே என்று எண்ணினேன். உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையென்பதை காணட்டும். அது மிகவும் முக்கியமான காரியம், பாருங்கள்... நீங்கள் சுகம் பெற்றால் தேவன் உங்களுக்கு நிச்சயமாக சுகமளிப்பார். அவர் ஏற்கனவே அதை நிறைவேற்றிவிட்டார். அதை விசுவாசித்து நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். ஆனால் நீங்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேர்ந்தால் மறுபடியும் வியாதிப்பட ஏதுவுண்டு, ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டால், அது வித்தியாசமான காரியம். பார்த்தீர்களா? இந்த ஒரு காரியத்தை உங்களிடம் கூற எண்ணுகின்றோம். ஏனெனில் சுகமளிக்கும் ஆராதனையை கண்டிராத அந்நியர்கள் சில நேரங்களில் இக்கூட்டங்களுக்கு வருகின்றனர். அவர்கள் அநேக முறை தெய்வீக சுகமளிப்பவர் என்னும் பெயரை எனக்கு சூட்ட முயல்கின்றனர். தெய்வீக சுகமளிக்கும் மனிதர் எவருமேயில்லை. தெய்வீக சுகமளிப்பவர் ஒருவர் மாத்திரமே. அவர்தான் தேவன். வெளிப்படையாகக் கூறினால் சுகமளிப்பவர் ஒருவரே, அவர் தேவன் மாத்திரமே. 10மருத்துவர்கள், தாங்கள் சுகமளிக்கிறவர்களென்று உரிமை கோருவதில்லை. அவர்கள் சுகமளிப்பவர்களல்ல. அவர்கள் அவ்வாறு உரிமை பாராட்டுவதுமில்லை. என் கை முறிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், நான் மருத்துவரிடம் சென்று, “டாக்டர், என் கையை உடனே குணமாக்குங்கள்'' என்று கூறினால், அவர், ''உன் மூளை கோளாறு முதலில் குணமாக வேண்டும்'' என்பார். அவர் கூறுவது உண்மை. பாருங்கள்? மருத்துவர் முறிந்து போன என் கையை சரியாக பொருத்தலாம். ஆனால் தேவனே அதை சுகப்படுத்துகிறவர். என் கையை கத்தியால் வெட்டிக் கொள்ள நேர்ந்து, நான், ''டாக்டர், என் கையை வெட்டிக் கொண்டுவிட்டேன். உடனே சுகப்படுத்துங்கள்'' என்று கூறினால், அவரால் அதை செய்ய முடியாது. அவர் செய்யக் கூடியதெல்லாம் அதை கழுவுவதே. வெட்டுக்காயம் அகலமாயிருந்தால், அவர் அதை தைக்க முடியும். ஆனால் அதை சுகப்படுத்துபவர் தேவன் மாத்திரமே. பாருங்கள், இயற்கை ஜீவ அணுக்களை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த ஜீவன் தான் அதை ஒன்று சேர்க்கிறது. சரீரம் கால்சியம் போன்றவைகளை உற்பத்தி செய்ய வேண்டும். சரீரத்துக்குள் ஜீவன் உள்ளது. கால்சியம் அதை சுகப்படுத்தாது, ஜீவனே சுகப்படுத்தும். பாருங்கள், மருந்துகள் எதுவும் சுகமாக்குவதில்லை. அவை சுத்தமாக வைக்க உதவுகின்றன. தேவன் சுகமாக்குகிறார். பாருங்கள்? எந்த மருந்தும் சுகமாக்குவதில்லை. 11என் கையை நான் வெட்டிக் கொண்டு, மரித்து கீழே விழ நேர்ந்தால், நீங்கள் என் உடலை மருத்துவரிடம் கொண்டு சென்று, “இவரை நீங்கள் சுகப்படுத்த முடியுமா?'' என்று கேட்டால், ''அவர் மரித்து விட்டாரே'' என்று அவர் விடையளிப்பார். நீங்கள், ''அந்த வெட்டு காயத்தை தைத்துவிடுங்கள். அந்த கையைச் சுகப்படுத்த உங்களிடம் மருந்து இருக்கிறதல்லவா?'' என்டு அவரைக் கேட்பீர்களானால், என்னிடம் இல்லை'' என்று கூறிவிடுவார். நீங்கள் அந்த வெட்டு காயத்தைத் தைத்து, நூறு ஆண்டு காலம் கெடாமலிருக்க என் சவத்திற்கு தைலமிட்டு, தினந்தோறும் எனக்கு பென்சிலின் ஊசி போட்டு, அந்த வெட்டுக் காயத்தின் மேல் களிம்பு தடவினாலும், அந்த காயம் ஆறவே ஆறாது. ஏன்? ஏனெனில் ஜீவன் உடலை விட்டுப் போய்விட்டது. அப்படியானால், சுகமளிப்பது எது? மருந்தா அல்லது ஜீவனா? ஜீவன் என்னவென்று என்னிடம் கூறுங்கள், அப்பொழுது தேவன் யாரென்று உங்களிடம் கூறுவேன். தேவனே ஜீவன், பாருங்கள்? நீங்கள்... 12சென்ற இரவு, “நம்மிடம் இயந்திர இணைப்பு (Mechanics) நிறைய உள்ளது, ஆனால் அதை இயக்கும் சக்தி (Dynamics) இல்லை'' என்று கூறினேன். என் சரீரம் இயந்திர இணைப்பு போன்றது. ஆனால் அதை இயக்கக் கூடிய ஆவியாகிய சக்தி இல்லாமல் போனால், என் சரீரம் இயங்காது. பாருங்கள்? ஆவியே என் சரீரத்தை இயக்கி அதை கட்டுக்குள் கொண்டு வருகிறது. மோட்டார் வாகனத்துக்கு பெட்ரோல் இல்லாதது போல்; அதை ஓட்டுவதற்கு அவசியமான சக்தியில்லை. எவ்வளவு சிறப்பாக அதன் பாகங்கள் இணைக்கப்பட்டு, காண்பதற்கு அழகாக இருந்தாலும், அதற்கு மின்சாரமும் அவசியமாயுள்ளது. இவ்விரண்டும் ஒன்றாக அமைய வேண்டும். தேவனும் அப்படித்தான் இருக்கிறார். ஒரு விசுவாசி தேவனுடன் தொடர்பு கொள்ளும் போது மாத்திரமே, ஏதோ ஒன்று அவனில் நிகழ்கின்றது. 13எனவே தெய்வீக சுகமளித்தல் என்பது இரட்சிப்பைப் போன்றது. உங்கள் ஆத்துமாவுக்காக இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் மனிதன் எவனும், தன்னை தெய்வீக இரட்சகர் என்று தன்னை அழைத்துக் கொள்ள விரும்பமாட்டான். தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கம் செய்பவர் எவ்வளவாக தெய்வீக சுகமளிப்பவராக இருக்கிறாரோ, அதே அளவுக்கு தான் இரட்சிப்பைக் குறித்து பிரசங்கம் செய்பவர் எவரும் தெய்வீக இரட்சகராக இருக்கிறார். ஏனெனில் யாரும் எந்த மனிதனையும் இரட்சிக்க முடியாது. இயேசு ஏற்கனவே அதை நிறைவேற்றிவிட்டார். பாருங்கள்? ஒருவர் அவருடைய பிரசங்கத்தின் மூலமாக இரட்சகராகிய இயேசுவை சுட்டிக் காண்பிக்கிறார். அவ்வாறே தெய்வீக சுகமளித்தல், கல்வாரியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கிரியையை சுட்டிக் காண்பிக்கிறது. ''நமது மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளாலே குணமானோம்'' (ஏசா. 53:5). பாருங்கள்? பாருங்கள்? தெய்வீக சுகமளித்தல் என்பது, ஒரு மனிதன் அதை பெற்றிருந்து அதை உங்கள் மேல் வைப்பதல்ல. ஏற்கனவே முடிவு பெற்ற கிரியையின் மீது நீங்கள் வைத்துள்ள விசுவாசமே அது. 14நான் அணிந்துள்ள இந்த 'சூட்'டை அணிந்து கொண்டு, இயேசு இன்றிரவு உங்கள் மத்தியில் நிற்பாரானால், அவர் உங்களை சுகப்படுத்த முடியாது. ஒருக்கால் அவர்... அவர் இயேசு என்று நீங்கள் அறிந்திருக்கலாம். ஆயினும் அவர் உங்களை சுகப்படுத்த முடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே அதை செய்து முடித்துவிட்டார். பாருங்கள், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டியது தான். அவர் உங்களை நோக்கி, ''என் பிள்ளையே, என் தழும்புகளால் நீ குணமாகிவிட்டாய் என்று உனக்குத் தெரியாதா?'' என்று கேட்பார். அது முடிவு பெற்ற கிரியை. அது இறந்த காலம். அதை இப்பொழுது நாம் விசுவாசிக்கிறோம். எனக்கு தேவனுடைய வார்த்தை ஒன்றே போதுமானதாயுள்ளது. நீங்கள் ஒருவருக்கு ஒன்றை எடுத்துக் கூறி, அவர் விசுவாசிக்காமல் போனால், அவ்வளவு தான். வேண்டுமானால் அவர்கள் விசுவாசிக்காமலிருக்கட்டும். ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல. 15ஒரு போதகரும் அவருடைய மனைவியும் பாடின ஒரு பாடலை நான் கேட்டிருக்கிறேன். “மரிக்க வேண்டிய மானிடர் ஒருவருக்கொருவர் மன்னிக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவர்களைப் போலிராமல், மன்னித்து மறந்தும் விடுகிறார்.'' பாருங்கள்? நம்மால் மறக்க முடிவதில்லை. அவரால் முடியும். அவர் தேவன். அவரால் அதை மறக்க முடியும். அப்பொழுது அது முன்பிருந்தது போலவே இல்லை. அவர் அதை மறதியின் கடலுக்குள் போட்டுவிட்டு, அதை நினையாமல் இருக்கிறார். அவர் நினைவில் அது இல்லை. அவர் தேவன். அவருடைய நினைவிலிருந்து அதை அறவே அகற்றிவிடுகிறார். ஆனால் நம்மால் அப்படி செய்ய முடியாது. அவரால் முடியும். அவர் உங்களுக்கு இதை செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கும் போது, “அவர் உங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்ட போது, உங்களை ஏற்கனவே சுகமாக்கிவிட்டார், அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்”, இறந்த காலம். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அதை விசுவாசிப்பதே. தேவனுடைய வார்த்தை அப்படித்தான் போதிக்கின்றது. அப்படி போதிக்கவில்லையென்று யாரும் கூற முடியாது. அது நிச்சயமாக அப்படி போதிக்கின்றது. அதற்கு அத்தாட்சியாக ஜனங்கள் எல்லாவிடங்களிலும் சுகமடைவதை நாம் காண்கிறோம். தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்றுண்டு. 16நீங்களாவது நானாவது, இராஜாதிபத்திய தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமற் போனால், அதை விசுவாசிக்க வேண்டாம். அதன் விளைவாக ஜனங்கள் தான் வியாதிப்பட்டிருப்பார்களேயன்றி, தேவனல்ல. தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், மேய்ப்பர்களையும், சுவிசேஷகரையும் நியமித்தார். இவையனைத்தும் சரீரம் பரிபூரணப்பட வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டது. அவர் ஒன்பது ஆவியின் வரங்களை அளித்தார். வரங்கள் வெவ்வேறானவை ஞானம், அறிவு, பாஷை பேசுதல், சுகமளிக்கும் வரங்கள், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் போன்றவை; ஒன்பது ஆவியின் வரங்கள். இவையாவும் அவர் சபையின் மேல் வைத்துள்ள அன்பைக் காண்பிக்கும் பொருட்டு அளிக்கப்பட்டன. நீங்கள் சீர்பொருத்தினவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக பரிசுத்த ஆவியானவரே சபைக்கு உபாத்தியாக இருக்கிறார், ஆனால் பரிசுத்த ஆவியானவருக்குப் பதிலாக பேராயரை நமது உபாத்தியாக நாம் ஏற்றுக் கொண்டது மிகவும் மோசமான செயலாகும். சபையை வளர்க்க தேவனுடைய போதனையில் வளர்க்க தேவன் பரிசுத்த ஆவியை சபைக்கு உபாத்தியாக அளித்தார். எனவே பரிசுத்த ஆவி இவ்வரங்களை சபைக்கு தாராளமாக அருளியுள்ளார். அவை பிழையின்றி இயங்குகின்றன, நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு உங்கள் கருத்திற்கேற்ப அதை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால். 17அங்கு தான் ஜனங்கள் தவறு செய்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியின் காரணமாக உணர்ச்சி வசப்படுகின்றனர். அது நல்லது தான். ஆனால் யாராகிலும் உங்களை அணுகி, ''தேவன் என்ன கூறுகிறார்?'' என்று கேட்டால், நீங்கள் அவர்களுக்கு உத்தரவு சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேவன் எதையும் உங்களிடம் கூறாமல் நீங்கள் மற்றவர்களிடம் கூற வேண்டாம். அவர் உங்களிடம் ஒன்றைக் கூறும் போது, ''உங்களிடம் கர்த்தர் உரைக்கிறது என்னவெனில்'' என்பது இருக்கும். அப்பொழுது அது நிறைவேறாமல் இருக்க முடியாது. அது நிறைவேறிய தீர வேண்டும். பரிசுத்த ஆவி இக்கூட்டங்களில் “கர்த்தர் உரைக்கிறது என்னவெனில்'' என்று பேசின லட்சக்கணக்கானத் தருணங்களில் ஒன்றாகிலும் நிறைவேறாமல் இருந்ததை எனக்குக் காண்பிக்க உங்களிடம் சவால்விடுகிறேன். அவை நிறைவேறியே ஆக வேண்டும். 18இன்றிரவு பரிசுத்த ஆவி தரிசனத்தில் என்னிடம் வந்து, “நீ ஜனாதிபதியின் கல்லறைக்குப் போ. நான் ஜார்ஜ் வாஷிங்டனை உயிரோடு எழுப்பப் போகிறேன்'' என்று கூறுவாரானால், அது நிறைவேறுவதைக் காண நான் முழு உலகிற்கும் அழைப்புவிடுப்பேன். அது நிறைவேறியே ஆக வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவி அவ்வாறு உரைத்தார். அது அதை சத்தியமாக்குகிறது. ஆனால் அவர் கூறும் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டும். பார்த்தீர்களா? நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்றும், அவருடைய நன்மையினால் நீங்கள் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எப்படியென்று உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்குள் இருப்பாரானால் அவர் தமது வாழ்க்கையை உங்கள் மூலம் வாழ்ந்து காட்டுவார். எனவே நீங்கள் திருப்தியடையுங்கள். ஒன்று மாத்திரம் நிச்சயம், அவர் கட்டாயம் அதை செய்வார். நீங்கள் எந்நிலையில் இருக்கின்றீர்கள் என்று அவருக்குத் தெரியும். நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, ஐக்கியக் கொண்டு அவ்விதம் செய்யும் போது, நமது குழுவைக் குறித்தும், ஸ்தாபனங்களைக் குறித்தும், தடைகளைக் குறித்தும் மறந்துவிடுகின்றோம். அப்பொழுது தேவனுடைய மகத்தான சேனை வெற்றியை நோக்கி அணி வகுத்து செல்கிறது. 19இன்றிரவு வேதத்திலிருந்து ஒரு சிறு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். உங்களில் அநேகர் என்னுடன் சேர்ந்து வாசிக்க விரும்புவீர்கள். நீங்கள் விரும்பினால். நிச்சயம் அப்படி செய்யலாம். இப்பொழுது பரி. மத்தேயு சுவிசேஷம் 12ம் அதிகாரத்திற்கு வேதத்தைத் திருப்புவோம். நான் படிக்கும் போது நீங்களும் என்னுடன் படிக்க விரும்பினால். 38ம் வசனம் தொடங்கி நான் பேசவிருக்கும் பொருளை அறிவிக்க விரும்புகிறேன்; இக்காலத்தின் அடையாளம். இது எல்லோருக்கும் தெரிந்த பொருள். இதை ஏன் பேசத் தெரிந்து கொண்டேன் என்றால், நான் ஜனங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். ஆழமான பிரசங்கத்தை செய்துவிட்டு, மறுபடியும் ஜெப வரிசைக்கு வர எனக்கு விருப்பமில்லை. பரிசுத்த ஆவியின் வரங்கள் ஒரு பிரத்தியேக கால்வாயின் வழியாக கிரியை செய்கின்றது என்று எவருக்கும் தெரியும், ''ஒரே ஆவியினாலே சுகமாக்கும் வரங்களும், அந்த ஆவியினாலே பற்பல பாஷைகளைப் பேசுதலும்“, மற்றொரு கால்வாய். நாம் ஒன்றைவிட்டு மற்றொன்றுக்கு செல்கிறோம். இப்பொழுது நாம் படிப்போம். அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவார்கள், தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு, நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள். மத்.12:38-42 20இப்பொழுது நாம் படித்த இந்த வேத பாகத்தில், யூதர்கள் விசுவாசித்த போக்கில், அது சரிவர அமைந்துள்ளது என்று பார்க்கிறோம். யூதர்கள் அடையாளங்களில் விசுவாசம் வைத்திருந்தனர். இந்த வேதசாஸ்திரிகள் இயேசுவிடம் வந்து, இதை அவரிடம் விவாதித்து, அவரால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புவதாகக் கூறினர். அவர்கள் எவ்வளவாக குருடராக இருந்தனர் பார்த்தீர்களா? அவர் யாரென்று, அதாவது அவர் மேசியா என்று, அவர் ஏற்கனவே தமது அடையாளத்தைக் காண்பித்திருந்தார். அதைக் குறித்து நேற்று மாலை நாம் பார்த்தோம். எத்தனை பேர் நேற்று மாலை இங்கிருந்தீர்கள்? பார்க்கட்டும்? நல்லது. சரி, 21சென்ற இரவு அதைக் குறித்து நாம் பார்த்தோம். அவரே மோசே தீர்ச்க்தரிசனம் உரைத்த தீர்க்கதரிசி என்பதை நிலைவரப்படுத்த அவர் காண்பிக்க வேண்டிய மேசியாவின் அடையாளம் என்னவென்பதை நாம் சபையோருக்கு நிருபித்துக் காண்பித்தோம். “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அந்த தீர்க்கதரிசியை விசுவாசியாதவன் எவனோ, அவன் ஜனத்தின் மத்தியிலிராதபடி அறுப்புண்டு போவான்.'' ஆனால் அவர் தோன்றி தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்து காட்டின போதோ, அநேகர் அவரை பெயல்செபூல் என்றும், பொல்லாத ஆவி என்றும் அழைத்தனர். அவர் அவர்களை நோக்கி, “இது உங்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவி வரும் போது, இதே கிரியையை அவர் செய்வார். அதற்கு விரோதமாக நீங்கள் பேசினால், அது உங்களுக்கு இவ்வுலகத்திலும் வரப்போகும் மறு உலகத்திலும் மன்னிக்கப்படாது'' என்றார். 22இதை நாம் எளிதாக அணுக விரும்பவில்லை. இதை நாம் உத்தமமாக பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அவர் செய்த கிரியைகளையே பரிசுத்த ஆவி வந்து செய்யும்போது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும், அது இவ்வுலகிலும் வரப்போகும் உலகத்திலும் மன்னிக்கப்படாது என்று இயேசு உரைத்தார். கவனியுங்கள், பெந்தெகொஸ்தே வரை பரிசுத்த ஆவி அருளப்படவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துசெய்த கிரியைகளை யூதர்களும் சமாரியர்களும் கண்டனர். நீதியுள்ள தேவன் நீதியுள்ள ஜனங்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தமாட்டார். தேவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்த அநீதியுள்ள ஜனங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் பரிசுத்தஆவி கடைசி நாட்களில் சபையின் மேல் வந்து, அவர் அன்று செய்த அதே அடையாளங்களையே மறுபடியும் செய்து காண்பிக்க வேண்டும். ஏனெனில் தேவன் தமது வழிகளை ஒரு போதும் மாற்றுவது கிடையாது. 23தேவன் ஒரு காரியத்தை ஒரு வழியிலும், மற்றொன்றை வேறொரு வழியிலும் செய்வது கிடையாது. பாருங்கள், அவருடைய முதல் தீர்மானமே பிழையற்றதாய் உள்ளது. ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். பாருங்கள்? அவருடைய வார்த்தையை மாற்ற முடியாது. மனித வரலாற்றின் இந்த ஆறாயிரம் ஆண்டு காலத்தில், நாம் கூடுதலாக கற்றுக் கொண்ட விதமாக, அவர் கூடுதலாக கற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் தொடக்கத்திலேயே முடிவற்றவராய் இருக்கிறார். பாருங்கள்? அவர் தமது வார்த்தையை ஒருபோதும் மாற்றுவது கிடையாது. பாவமில்லாத ஒன்றின் இரத்தம் சிந்தப்படுவதன் மூலம் அவர் மனிதனை இரட்சிக்க சித்தம் கொண்டார். அவர்களுக்கு கல்வியறிவு புகட்ட நாம் முயன்றோம், அவர்களை ஸ்தாபனங்களுக்குட்படுத்த நாம் முயன்றோம், இவ்வுலகிலுள்ள எல்லாவற்றையும் நாம் செய்ய விரும்பினோம். சமுதாய வாழ்க்கை உட்பட. ஆனால் அவை ஒவ்வொன்றும் தவறின. நாம் இரத்தத்தின் கீழ் வரும் வரைக்கும், எல்லாமே தவறாயிருக்க நேரிடும். அந்த ஓரிடத்தில் மாத்திரமே ஐக்கியம் உண்டாயிருக்கும். 24தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. தேவன் ஒன்றைக் கூறுவாரானால் அது நிரந்தரமாக இருக்கும்... ஒரு மனிதன் தேவனிடத்தில் வரும்போது, அவனுடைய விசுவாசத்தின் அடிப்படையில் தேவன் அவனை சுகப்படுத்துவாரானால், அடுத்தபடியாக வரும் மனிதனுக்கும் அதே அடிப்படையில் அவர் சுகமளிக்க வேண்டும். இல்லையேல், முதல் மனிதனுக்கு அவர் சுகமளித்தபோது அவர் தவறு செய்தார் என்று அர்த்தமாகிவிடும். ஒரு மனிதனை இரத்தத்தின் கீழ் மாத்திரமே அவர் இரட்சித்து, வேறு யாராகிலும் வேதசாஸ்திரிகள் உட்பட அவன் மேல் இரத்தம் தெளிக்கப்படாமலே கல்வியின் மூலமாக உள்ளே நுழைய அவர் அனுமதிப்பாரானால், முதலாவது மனிதனுக்கு இரத்தம் வேண்டுமென்று அவர் கூறினபோது அவர் தவறாக நடந்து கொண்டார் என்று அர்த்தமாகும். பாருங்கள், அவர் என்றென்றும் மாறாதவராக இருத்தல் அவசியம். அருடைய நோக்கங்களும் மாறாதவைகளாக இருக்க வேண்டும். அவருடைய கிரியைகள் என்றென்றும் மாறாதவைகளாக இருந்து வருகின்றன. 25தேவன் எக்காலத்தும் ஒரு ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டதில்லை. சபை வரலாற்றைப் படித்து அதை அறிந்து கொள்ளுங்கள். அவர் எப்பொழுதும் தனிப்பட்ட ஒரு நபருடன் மாத்திரமே தொடர்பு கொள்ளுகிறார் குழுவினிடமல்ல, தனிப்பட்ட ஒரு நபருடன். தேவன் பெரிய மனிதன் ஒருவரை எழுப்பி காட்சியில் அனுப்புகிறார். அந்த மனிதன் மறைந்தவுடன், அவர்கள் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்று சரித்திரத்தில் நாம் காண்கிறோம். ஜனங்கள் ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் மரிக்காமல் இருந்ததேயில்லை. அது மரித்த பின்பு, ஆவிக்குரிய நிலையை அது மீண்டும் அடைவதில்லை. நான் வேத சரித்திரத்தை இருபது ஆண்டு காலமாக படித்து வருகிறேன். மரித்த ஸ்தாபனம் மீண்டும் உயிர் பெற்றதாக எங்கும் கூறப்படவில்லை. 26தேவன் ஒரு நாளுக்காக மாத்திரம் தொடர்பு கொள்ளுகிறார். நாளை அவர் என்ன செய்யப்போகிறாரென்பது அவரைப் பொறுத்தது. அவர் தனிப்பட்ட நபர் ஒருவர் மூலமே நம்முடன் தொடர்பு கொள்ளுகிறார். ஏனெனில் குழுவிலுள்ள மனிதருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உண்டாயிருக்கும். கவனியுங்கள், அப்போஸ்தலர்களும் கூட யூதாஸின் மரணத்துக்குப் பின்பு, அவனுக்குப் பதிலாக வேறொருவனை தேர்ந்தெடுக்க நினைத்தனர். அவர்கள் சீட்டு போட்டதில், அது மத்தியாவின் பேருக்கு விழுந்தது. ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொண்டு அவர்கள் சிறப்பாக செய்ய முடிந்தது அவ்வளவே. மத்தியா ஏதாகிலும் செய்ததாக வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் தேவனோ முன் கோபியான சவுலைத் தெரிந்து கொண்டார். அவர் அவனை மல்லாக்க கீழே தள்ளி, அவன் சற்று மேல் நோக்கி பார்க்கும்படி செய்தார். அவர், “என் நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுப்ட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். (அப். 9: 16). பாருங்கள்? சபை மத்தியாவைத் தெரிந்துகொண்டது. ஆனால் தேவனோ பவுலைத் தெரிந்து கொண்டார். அது தான் வித்தியாசம். தேவன் எப்பொழுதுமே முன்னறிவினால் தாம் முன்குறித்தவர்களைத் தெரிந்து கொள்ளுகிறார். 27தேவன் எப்பொழுதுமே அடையாளங்கள், அற்புதங்கள் மூலம் ஜனங்களிடம் தொடர்பு கொள்கிறார் என்று நாம் காண்கிறோம். கடைசி நாட்களுக்காகவும் அவர் அடையாளங்களை வாக்குத்தத்தம் செய்துள்ளார். தேவன் தமது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. அவர் எப்பொழுதுமே தீர்க்கதரிசியின் மூலமாக தமது ஜனங்களிடம் பேசுகின்றார். இது வரை அநேக காலங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் தேவன் எப்பொழுதுமே தாம் பேசுவதற்கென்று எங்கோ ஓரிடத்தில் ஒரு தீர்க்கரிசியை வைத்திருந்தார். தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது. பாருங்கள்? 28இந்த தீர்க்கதரிசி எங்கிருக்கிறார் என்று ஜனங்கள் தேடிக் கண்டு பிடித்தனர். “ஞானதிருஷ்டிக்காரன்'' (Seer) என்றால் ”முன்னுரைப்பவன்'' என்று அர்த்தம். இனி நிகழ விருப்பவைகளை ஞானதிருஷ்டிக்காரன் முன் கூட்டியே கண்டு அதை ஜனங்களிடம் முன்னுரைக்கிறான். அவன் சொல்லும் காரியம் நிறைவேறாமல் போனால், ''அவனுக்குச் செவி கொடுக்க வேண்டாம்'' என்று வேதம் கூறுகிறது. (உபா. 18:22). அது நிறைவேறாமல் போனால், தேவன் அவனோடு கூட இல்லை என்பதாக அவர் கூறினார். எனவே அதை அடிப்படையாகக் கொண்டு தேவனுடைய வார்த்தை பழைய ஏற்பாட்டின் ஞானதிருஷ்டிக்காரர்களுடன் இருந்ததா என்று ஜனங்கள் கண்டு கொண்டனர். 29பரிசுத்த ஆவி அந்த போக்கை மாற்றுவது கிடையாது. ''பரிசுத்த ஆவி; உங்கள் மேல் வரும்போது, நான் உங்களுக்குக் கற்பித்ததை உங்களுக்குக் காண்பித்து, வரப் போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்'' என்று இயேசு கூறினார். பாருங்கள், அவர் ஒருபோதும் தமது முறையை மாற்றுவதில்லை. அது எப்பொழுதுமே மாறாததாயுள்ளது. எனவே நாம் அவரை நம்பலாம். ஆனால் பாருங்கள், மானிடராகிய நாம் வெவ்வேறு காரியங்களில் சிக்குண்டு, மனிதர் கூட்டமாக ஒன்று சேர்ந்து அதற்கும் இதற்கும் ஓட்டு போடுகின்றனர். அது தான் நம்மை பாதையிலிருந்து விலக்கிவிடுகின்றது. அவர்கள், “இது, வேறொரு நாளுக்குரியது'' என்கின்றனர். இல்லை. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை அனைத்துமே தேவனுடைய ஆவியால் அருளப்பட்டவை, எல்லா வார்த்தையும். 30மேசியாவை, அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசியாக கர்த்தர் எழும்பப் பண்ணுவார் என்று மோசே முன்னுரைத்தபடியே, இயேசு அந்த அடையாளம் கொண்டவராய் தோன்றினார். அவர் தீர்க்கதரிசியென்று தெளிவாகக் காண்பித்தார். ஆனால் பரிசேயர் அவரிடம் வந்து, ''ஆண்டவரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்'' என்றனர். வேறொரு இடத்தில் நீங்கள் படிக்க விரும்பினால் பரி. மத்தேயு 16ம் அதிகாரம் 1 முதல் 3 வசனங்களில், அவரிடம் ஒரு அடையாளத்தை அவர்கள் மறுபடியும் கேட்டனர். அப்பொழுது அவர், “குருடராகிய பரிசேயரே, மாய்மாலக்காரரே, நீங்கள் வெளியே சென்று சூரியன் அஸ்தமிக்கிறதைக் காண்கிறீர்கள். 'நாளைக்கு வெளிச்சம் வரும்' என்கிறீர்கள், செவ்வானம் மந்தாரமாயிருக்கும் போது 'காற்றும் மழையும் உண்டாகும்' என்கிறீர்கள். மாய்மாலக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை உங்களால் நிதானிக்க முடியவில்லையே'' என்றார். அவர்களுக்கு அதை நிதானிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 31கடைசி நாட்களில் வரக்கூடிய பரிசுத்த ஆவி சபையில் கிறிஸ்துவின் ஜீவனாக, தத்ரூபமாக இருந்து, உலகம் அதை இகழ்ந்து அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை கூறினால், தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் அது நிர்மூலமாகும். உலகம் என்ன செய்தது என்று நீங்கள் கண்டிருக்கிறீர்கள். எனவே தேவன் பரலோகத்திலிருந்து நியாயத்தீர்ப்பைப் பொழிவார் என்பது நிச்சயம். நமது தேசம், நமது பட்டினங்கள், நமது உலகம் அனைத்துமே நியாயந்தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ''தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்படி குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை'' என்று இயேசு கூறியுள்ளார். (மத்.24:22), 32சற்று சிந்தித்து பாருங்கள். நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு அது மோசமாகிக் கொண்டே வருகிறது. 'பரிசுத்த ஜனங்கள்', பெந்தெகொஸ்தேயினர் இவர்களைப் பாருங்கள். எப்படி சீர்கேடு சபைகளுக்குள் நுழைந்துவிட்டது என்று கவனியுங்கள். வீண் சந்தடி அங்கு நடந்து கொண்டிருக்கிறது. நமது பெண்களைப் பாருங்கள். அவர்கள் கூந்தலைக் கத்தரிப்பது தவறென்று உணர்ந்திருந்தனர். அப்படி செய்வது தவறென்று வேதம் கூறுகிறது. அப்படியிருந்தும் அவர்கள் அதை செய்கின்றனர். அப்படி செய்யக் கூடாதென்று வேதம் கூறியுள்ளது. ஆண்களின் உடைகளை பெண்கள் அணிவது தேவனுடைய பார்வையில் அருவருப்பானது என்று வேதம் கூறுகிறது. ''மெதோடிஸ்டுகள் தாம் அப்படி செய்கின்றனர்'' என்று நீங்கள் கூறலாம். பெந்தெகொஸ்தேயினரும் கூட அவர்கள் எல்லோருமே அப்படி செய்கின்றனர், பாருங்கள். ஏன் அப்படி? வேதத்தைப் படிப்பதைக் காட்டிலும் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புகிறீர்கள். தேவனுடைய வார்த்தையில் கூறப்படுபவர்களை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, தொலைக் காட்சியில் வருபவர்களை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். பாருங்கள்? அப்படியானால், நியாயத்தீர்ப்பு வந்தே தீரவேண்டும். அது படிப்படியாக மோசமாகிக் கொண்டே போகின்றது. 33ஒரு அடையாளம் இருக்குமென்று இயேசு அவர்களிடம் கூறினார். அவர் கடைசி நாட்களில் காணப்படும் அடையாளத்தைக் குறித்து பேசினார். சென்ற இரவு அவர் நம்மிடம், ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும். தேவனுடைய ஆவி, கடைசி நாட்களில் மாமிசத்தில் வெளிப்பட்டு, மனதிலுள்ள இருதயத்திலுள்ள நினைவுகளை வகையறுக்கும்'' என்று கூறினார். தேவனுடைய வார்த்தை அப்படி செய்யுமென்று வேதம் எபிரேயர் 4ல் கூறுகிறது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ள தாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும், இருக்கிறது.'' (எபி.4:12) 34ஆகவே தான் இயேசு வார்த்தையாயிருந்தார். “ஆதியிலே''. யோவான் 1: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தைதேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' அதனால் தான் அவரால் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் அவர் கிணற்றடியிலிருந்த சமாரியா ஸ்திரீயிடம், “ஐந்து புருஷர்கள் உனக்கிருந்தார்கள்'' என்று சொல்ல முடிந்தது. அதனால் தான், பிலிப்பு நாத்தான்வேலை அவரிடம் கொண்டு வந்தபோது, அவர் நாத்தான்வேலை நோக்கி, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று கூற முடிந்தது. அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்'' என்றார். நினைவுகளை வகையறுக்கிறவர். ஓ, வேதத்தில் அநேக இடங்களில் அவர் இவ்வாறு தம்மை அடையாளம் காண்பித்திருக்கிறார். ஆனால் அது புறஜாதிகளுக்கல்ல ஒரு முறையாவது அவர் இவ்விதத்தில் தம்மை புறஜாதிகளுக்கு அடையாளம் காண்பித்ததில்லை. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். ஒரு முறையாவது இல்லை. இந்நாட்களில் தான் அவர் அவ்வாறு செய்கிறார். பாருங்கள்? புறஜாதிகளுக்கு இரண்டாயிரம் ஆண்டு காலமாக வேதபாகமும் வேத சாஸ்திரமும் இருந்து வந்துள்ளது. அவர் தமது நாமத்திற்கென புறஜாதிகளினின்று ஒரு கூட்டம் ஜனத்தைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது, சோதோம் எரிந்து போனது போன்று இது எரிவதற்கு முன்பு, இது (நினைவுகளை வகையறுக்கும் அடையாளம் - தமிழாக்கியோன்) செய்யப்பட வேண்டியதாயுள்ளது. 35இங்கு இயேசு தம்மை அடையாளம் காண்பிக்கின்ற, உறுதிப்படுத்தப்பட்ட, வேதபூர்வமான அடையாளத்துடன் காட்சியளிக்கிறார். ஆயினும் அந்த யூதர்கள், “நீர் ஒரு அடையாளம் செய்வதைக் காண விரும்புகிறோம்'' என்கின்றனர். அவிசுவாசிகள் அவ்விதம் நம்மிடம் கூறுவதைக் கேட்டிருக்கின்றீர்களா? ''இன்னார் இன்னார் அந்த தெருவில் வசிக்கின்றார். இது உண்மையானால், அவரைச் சுகப்படுத்தட்டுமே பார்க்கலாம்'' என்கின்றனர். பாருங்கள், அது... அது சாத்தான் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம், அதே காரியம். அவர்கள் இயேசுவை நோக்கி, ''நீ தேவனுடைய குமாரனேயானால்; சிலுவையிலிருந்து இறங்கி வா'' என்று துஷித்தனர். (மத். 27:40). அவர்கள் அவருடைய முகத்தின் மேல் ஒரு கந்தை துணியைப்போட்டு, “இவன் தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்கிறான்'' என்று சொல்லி, அவருடைய தலையில் கோலால் அடித்து, ''உன்னை அடித்தது யார் என்று சொல்'' என்று கூறி, தடியை ஒருவர், கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றி, ”அதை கூறினால் உன்னை நம்புவோம்'' என்றனர். ஆனால் தேவனோ யாருக்காகவும் கோமாளித்தனம் செய்வதில்லை. இயேசு, “பிதா எனக்குக் காண்பிக்கிறவைகளை மாத்திரம் நான் செய்கிறேன்'' என்றார், பாருங்கள்? அது உண்மை. 36தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் என்னும் தன் எஜமானுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிகிறவனாயிருக்கிறான். பாருங்கள்? மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட ஏதாவது ஒரு காரியத்தை அவன் செய்வதோ அல்லது கூறுவதோ கிடையாது. அவனை அனுப்பினவருக்கு அவன் உத்தமமும் உண்மையுமாய் இருக்கிறான். அப்படிப்பட்டவன் தான் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன். ஈசாக்குக்குப் பெண் தேட புறப்பட்டு வந்த ஆபிரகாமின் பிரதிநிதியாகிய எலியேசரைப் போன்று. அந்த அழகான ரெபேக்காளை அவன் தெரிந்தெடுத்தான். அவன் ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்து, சிறந்த வேலைக்காரனுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். அவன் தன் எஜமானின் பணியில் மாத்திரம் கருத்தாய் ஈடுபட்டிருந்தான். பரிசுத்த ஆவிக்கு அது இன்று எத்தகைய எடுத்துக்காட்டாய் உள்ளது! அதே காரியம் தான். சாயங்கால நேரத்தில், வெளிச்சம் மங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் மணவாட்டியை தெரிந்துகொண்டிருக்கிறார். 37அவர்கள் ஒரு அடையாளத்தைக் காண விரும்பினர். வேதப் பூர்வமான அடையாளத்துடன் அவர் தம்மை அடையாளம் காண்பித்த போதிலும், அவர்கள் வேத அடையாளத்தில் நம்பிக்கை கொள்ளாமல், அவர் கோமாளித்தனம் செய்ய வேண்டுமென்று விரும்பினர். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? அதே விதமான ஆவிதான், “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக் குதியும். ஏனெனில், 'உம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்' என்று தேவதூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே'' என்றுரைத்தது. அவர் தமது காலை கல்லில் மோதவில்லை. பாருங்கள்? நிச்சயமாக. நீங்கள் காண்பீர்களானால், சிலுவையில் அவர் தொங்கின போது கூட அவர்கள் அதையே கூறினர். அந்த ஆவி, பரிசேயர்களுக்குள் இருந்து கொண்டு, ''ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்'' என்றது. அவர், “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” என்றார். கவனியுங்கள். 38தேவன் எல்லா காலங்களிலும் தமது பிள்ளைகளுக்கு அடையாளங்களை வைத்திருந்தார். ஒன்றை செய்வதற்கு முன்பு, தேவன் ஒரு அடையாளத்தை அனுப்புகிறார். அவர் முதலாவதாக அடையாளத்தை அனுப்புகிறார். அவர் அதையே இப்பொழுதும் செய்யப் போவதாக வாக்களித்துள்ளார். ஏனெனில் அவரால் மாற முடியாது. எனவே கடைசி காலம் அணுகுவதை நாம் காணும் போது, கடைசி காலத்தின் அடையாளங்களை நாம் முதலில் காண்கிறோம். சோதோம், எரிவதற்கு முன்பு வாக்களிக்கப்பட்டிருந்த கடைசி அடையாளமும். நமக்கு மகிழ்ச்சி உண்டாயிருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் அசைக்கப்படுதல் நமக்கு ஏற்பட்டுவிட்டது. நாம் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்பட்டுவிட்டோம். பூமியதிர்ச்சிகள் பலவிடங்களில் உண்டாயின. இவையாவும் நிறைவேறிவிட்டன. சபையில் ஆவியின் வரங்கள் திரும்ப வந்துவிட்டன. அநேக அற்புதங்களும், மகத்தான “சுகமளிக்கும் ஆராதனைகளும் நம்மிடையே நிகழ்ந்தன. இவையாவும் அடையாளங்களே''. ஆனால் புறஜாதிகள் எரிந்து போவதற்கு முன்பு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடைசி. அடையாளம், தேவன் மாமிசத்தில் வெளிப்படுதலாகும். இயேசு மறுபடியும் வரும் போதும் அப்படியே நிகழும் என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது நாம் கவனமாயிருந்து, தேவனிடம் நம்மை சரி செய்து கொள்ளவேண்டும். அப்படி செய்ய கவனமாயிருங்கள். 39யூதர்கள் எப்பொழுதுமே அடையாளங்களின் மேல் சார்ந்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். வேத சாஸ்திரம், வேத சொற்பொழிவு இவைகளுக்குப் பதிலாக அவர்கள் அடையாளங்களின் மேல் சார்ந்திருந்தனர். ஏனெனில் உண்மையான விசுவாசி எவனும், தேவன் வல்லமை பொருந்தியவர் என்று விசுவாசிக்கிறான். தேவன் எங்குள்ளாரோ அங்கு அடையாளங்கள் நிச்சயம் நடக்க வேண்டும். அடைகல் (anvil) மேல் எஃகு துண்டை சம்மட்டியால் அடிப்பது போன்றது அது. அப்பொழுது தீப்பொறிகள் பறக்க வேண்டும். அது போன்று, தேவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் அடையாளங்களும் அற்புதங்களும் நிகழும். ''விசவாசிக்கிறவர்களை இன்னின்ன அடையாளங்கள் தொடரும்'' என்று இயேசு கூறினார். உலகம் பூராவும் நடைபெறும் ஊழியத்தில் அடையாளங்கள் அவர்களைத் தொடருகின்றன. எப்பொழுதும் அடையாளங்கள். தேவன் தொடக்கத்தில் செய்தது போலவே எப்பொழுதும் அடையாளங்களைத் தருகிறார், அவர் ஒவ்வொரு சந்ததிக்கும், முடிவு வரைக்கும் அவ்வாறு அடையாளங்களைத் தருகிறார். 40நோவாவின் காலத்தில் அவர் அப்படி செய்தார். நோவா தன் சந்ததிக்கு அடையாளமாயிருந்தான். உலகத்தின் கண்களுக்கு அவன் பைத்தியக்காரனாகத் தென்பட்டான். அக்காலத்திலிருந்த விஞ்ஞானிகளுக்கு, அவனுடைய செய்தி அவர்களுடைய விஞ்ஞான கண்டுபிடிப்புடன் ஒத்துப் போகவில்லை. அவன், “தண்ணீர் வானத்திலிருந்து இறங்கி பூமியை வெள்ளத்தால் அழிக்கும்'' என்றான், அவர்கள் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பக் கூடும். அவர்களுடைய ராடாரை (Radar) கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும். அந்த விஞ்ஞானிகள், “வானத்தில் தண்ணீர் கிடையாதென்று விஞ்ஞான ரீதியாய் எங்களால் நிருபிக்க முடியும்'' என்றனர். ஆனால் நோவாவோ, ''தேவன் வல்லவராயிருக்கிறார்: அங்கு தண்ணீர் இல்லையென்றால், சிருஷ்டி கர்த்தராகிய தேவன் அங்கு தண்ணீரை சிருஷ்டிப்பார். அதை எப்படி செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியும்'' என்றான். அவன் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தான். பேழை மிதக்க தண்ணீர் இல்லாதிருந்த போதிலும், அவன் பேழையை உண்டாக்கினான். அவன் அக்காலத்து ஜனங்களுக்கு அடையாளமாயிருந்தான். எகிப்தில் மோசே அடையாளமாயிருந்தான், அவர்கள் மகத்தான அற்புதங்களை அங்கு கண்டனர். அப்படியே தொடர்ந்து சாலொமோன் வரை. 41அவர்கள் இயேசுவை... இயேசு அவர்களுக்கு அளித்தது உண்மையான, வேத ரீதியான தீர்க்கதரிசியின் அடையாளம். எத்தனையோ அடையாளங்கள் வேதப் பூர்வமானவை அல்ல. நாம் வேதப் பூர்வமான அடையாளங்களை மாத்திரமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அது வேதத்தில் காணப்பட்டு, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அது உண்மையென்று நாம் அறிந்து கொள்ளமுடியும். அதனுடன் அநேக காரியங்கள் இணைந்து செயல்படுகின்றன. தேவன் தாம் விரும்பின எதையும் செய்ய வல்லவராயிருக்கிறார். அவர் தேவன். ஆனால் அவர் தமது வார்த்தையை காத்துக் கொள்ளும் தேவன் என்று எனக்குத் தெரியும். எனவே அதை நான் தேவனுடைய வார்த்தையில் காண விரும்புகிறேன். அப்பொழுது அது உண்மையென்று அறிந்து கொள்வேன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. இயேசு தமது காலத்தில் வேதபூர்வமான அடையாளத்தைக் காண்பித்தார். ஆயினும் அவர்கள் அந்த அடையாளத்தை... அது வேதபூர்வமான அடையாளம் என்று அவர்கள் நம்ப விரும்பவில்லை. ஏனெனில் ஜனங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அவர்கள், “இது மனோதத்துவம். அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது'' என்று கூறிவிட்டனர். அவரை 'பெயல்செபூல்' என்று அவர்கள் அழைத்தனர். அதற்காக அவர் அவர்களைக் கடிந்து கொண்டார். அப்படியிருக்க, அவர் மறுபடியும் வரும் நேரத்தில் என்னமாயிருக்கும்? 42கவனியுங்கள், அவர் யோனாவைக் குறிப்பிடுகிறார். “யோனாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.'' அநேகர் யோனாவைப் பழிக்கின்றனர். நான் யோனாவைப் பழிப்பதில்லை. ''அவன் ஒரு யோனா'' என்று அநேகர் கூறக் கேட்டிருக்கிறோம். கிறிஸ்தவர்களே, நீங்கள் அப்படி செய்யக் கூடாது. தேவனுடைய ஊழியக்காரரை நீங்கள் பழிக்கக் கூடாது. யோனா ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனுடைய சித்தத்துக்கு அப்பாற்பட்டவனாக இல்லை. அவன் அவருடைய சித்தத்தையே. இக்காலத்தின் அடையாளம் செய்தான். ஒரு அடையாளத்துக்காக அவன் அதை செய்ய வேண்டியதாயிற்று. எதுவுமே எதேச்சையாக ஏற்படுவதில்லை. அது அடையாளத்துக்காக ஏற்படுகின்றது. 43ஒரு முறை ஒரு தீர்க்கதரிசி ஒரு வேசியை மணந்து, அவள் மூலம் பிள்ளை பெற்றான். மற்றொரு தீர்க்கதரிசி பக்கவாட்டில் முந்நூற்று நாற்பது நாட்கள் படுத்திருந்து, பின்பு மறுபக்கம் திரும்பி படுத்தான். வேறொருவன் தன் உடைகளைக் களைந்தான். இவையாவும் அடையாளங்களுக்காக செய்யப்பட்டன. அது போன்று, யோனாவும் ஒரு அடையாளத்துக்காக அதை செய்ய வேண்டியதாயிற்று. ஆபிரகாம், சாராள் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அவனுக்களித்தபோது, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக மணக்க வேண்டியதாயிற்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் மறுத்தான். ஆனால் கர்த்தர் அவனுக்கு பிரத்தியட்சமாகி, ''சாராளுக்கு செவி கொடு ஏனெனில் சுயாதீனமுள்ளவள் அடிமையானவளுக்கு சுதந்தரவாளியாயிருப்பதில்லை'' என்றார். அவள் குழந்தை பெற்றெடுத்த பின்பு, அவர்கள் இருவரையும் துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது என்ன? ஒரு அடையாளம். அவையாவும் அடையாளங்களே. தேவன் அடையாளங்களுக்காக இவைகளைச் செய்கிறார். 44யோனா ஒரு அடையாளமாக இருந்தான். நீங்கள் கவனிப்பீர்களானால் இயேசு அதை இங்கு குறிப்பிடுகிறார்: “இந்த பெலவீனமான, பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு அது கொடுக்கப்படும். யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்'' என்றார் அவர். அப்படியானால் யோனா எதற்கு அடையாளமாயிருந்தான்? அவன் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாயிருந்தான். சரி. 45எப்பொழுதாகிலும் நிலை குலைந்த (perverted) சந்ததி இருந்திருக்குமானால், அது, நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சந்ததியே, அது நமக்குத் தெரியும். அது நிலைகுலைந்துள்ளது. மன அமைப்பின்படியும் (mentally), சரீரப் பிரகாரமாகவும் (physically) இன சேர்க்கையின்படியும் (sexually) அது நிலை குலைந்துள்ளது. பொல்லாத சந்ததியார், அவிசுவாசிகள். இது வரை இருந்த சந்ததிகள் அனைத்திலும் கூடுதல் அவிசுவாசிகள் கொண்ட சந்ததி இதுவே. அவர்கள் மத சம்பந்தமான முறைமைகளைக் கைக்கொள்ளும் அவிசுவாசிகள். அவர்களுடன் ஈடுபாடு கொள்வதென்பது மிகவும் கடினம். நான் ஒரு மிஷனரி. என் ஊழியத்தில், வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத அஞ்ஞானிகளை அவர்கள் கொண்டு வருவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அந்த நிலையில் அஞ்ஞானி அங்கு வருகிறான். அவன் தேவனைக் குறித்து அதுவரை கேள்விப்பட்டதேயில்லை. அவன் ஏதோ ஒன்றைக் காண விரும்புகிறான். சத்தியம் என்னவென்று நீங்கள் அவனுக்கு நிரூபித்த மாத்திரத்தில், அவன் அதை ஏற்றுக் கொள்கிறான். 46ஆனால் படித்த அஞ்ஞானிகளோ அது பயங்கரமான சொல், ஆனால் அது உண்மை. பாருங்கள், படித்த அஞ்ஞானி. ஒருவன் அதைக் குறித்து தன் சொந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். பாருங்கள், அவன் தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறான். அவன், தன்னை தாழ்த்தி, தேவனுடைய வார்த்தையைக் கண்டு அதை விசுவாசிக்க அவனால் முடிவதில்லை. அந்த காலத்தில் பரிசேயரும் அவ்விதமாகவே இருந்தனர். அவர்களால் தேவனுடைய வார்த்தையைக் கண்டு, அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேவனுடைய வார்த்தை அங்கிருந்தது. அதை பார்க்கவும் அவர்கள் மறுத்தனர். அதன் அனுதாபமான பாகம். என்னவெனில், அவர்கள் உண்மையில் குருடராயிருந்தனர். தேவன் இதை ஒரு அடையாளத்துக்காக செய்தார். 47இன்றைக்கு என்ன நிகழ்கிறதென்று பாருங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பொல்லாத சந்ததியார் காணப்போகும் அடையாளம் உயிர்த்தெழுதலின் அடையாளமே. அத்தகைய ஒரே ஒரு அடையாளம் மாத்திரம் உண்டாகும் என்று அவர் கூறவில்லை... “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். அவர்கள்'' யோனாவின் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள் உயிர்த்தெழுதலின் அடையாளம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் உலகப் முழுவதிலும் உள்ளனர். அவர்கள் நியூயார்க்கில் மாத்திரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். அவர்கள் உலகம் பூராவும் பரம்பியுள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் மாத்திரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். அவர்கள் உலகம் முழுவதிலும் உள்ளனர். சரி, ”பொல்லாத சந்ததியார்'' பாருங்கள், அவர்கள் உயிர்த்தெழுதலின் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். 48இவ்வுலகில் ஆயிரக்கணக்கான மதங்கள் உள்ளன, புத்தர்கள், ஷியாக்கள், ஜைன மதத்தினர் போன்றவர்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய மத ஸ்தாபகர்களின் கல்லறைகளுக்கு உங்களைக் கொண்டு செல்ல முடியும். ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு மாத்திரமே காலியான கல்லறை உள்ளது, பாருங்கள்? அது மாத்திரமல்ல, அந்த ஜனங்களிடம், “அவர் என் இருதயத்தில் தங்கியிருக்கிறார்'' என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்து உங்களிடம் காண்பிப்பார்கள். அவர்கள் நிச்சயம் அப்படி செய்வார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் கவனத்தைத் திரும்புவார்கள். ஆம், நீங்கள் அஞ்ஞானிகளுக்கு மனோதத்துவத்தை உற்பத்தி செய்து காண்பிக்க முடியாது. பாருங்கள், ஏனெனில் அவனுடைய தெய்வம் அவன் இருதயத்திலும் தங்கியிருக்கிறது. முஸ்லீம்கள் தெருக்களில் படுத்து, அவர்கள் உணர்ச்சிவசப்படும் வரைக்கும் 'அலி, அலி' என்று சொல்லி கூப்பிட்டு, உடைந்த கண்ணாடித் துண்டை தங்கள் விரல்களில் பாய்ச்சி, எந்த கேடும் வராமல் இருக்கின்றனர். 49சுவிட்சர்லாந்திலுள்ள சூரிக் (Zurich) என்னுமிடத்தில் ஒரு மனிதன் தன் நுரையீரலில் பட்டயத்தை ஊடுருவச் செய்ததை நான் கண்டிருக்கிறேன். மேடையின் மேல் மருத்துவர் வந்து துளையின் வழியாக தண்ணீர் ஊற்றும் போது, அது மறு வழியாக வெளியே வரும். அவன் அதை பிடுங்கி எடுக்கும் போது ஒரு துளி இரத்தம் கூட வருவதில்லை. அவர்கள் நீண்ட ஈட்டியை தாடையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும், மூக்கு வழியாகவும் குத்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவனுடன் தேவனைக் குறித்து நீங்கள் பேசும் போது, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்று அறிந்திருப்பது நலம். நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வெறும் மனோதத்துவம் செயல்படாது. அவன் அதை உடனே கண்டு கொள்வான். எனவே நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். 50தேவன் எலியாவுடன் கர்மேல் மலையின் மேல் இருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் இன்றைக்கும் அன்று போலவே மாறாத தேவனாயிருக்கிறார். லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் அவர் கிரியை செய்வதை நான் கண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான மந்திரவாதிகள் அங்கு நின்று கொண்டு சவால் விடும்போது பரிசுத்த ஆவி என்ன செய்தார் என்பதை கவனித்திருக்கிறேன். அவர் செய்த வல்லமையான கிரியைகள் எழுதி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை நீங்கள் படித்து அறிந்திருக்கிறீர்கள். அது மாத்திரமல்ல, அதற்கு அத்தாட்சியாக எத்தனையோ வாக்குமூலங்களில் நீங்கள் கையொப்பமிட்டிருக்கிறீர்கள். அவர் இன்னும் தேவனாயிருக்கிறார். அவர் தமது வார்த்தைக்கு கடமைப்பட்டிருக்கிறார். அவர் உங்களுடைய விருப்பங்களுக்கு கடமைப்பட்டவரல்ல. அவருடைய சொந்த வார்த்தைக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார். பாருங்கள்? இந்த அஞ்ஞானிகள் என்ன செய்கின்றனர் என்று நாம் பார்த்தோம். 51இக்கடைசி நாட்களில் அவர், இப்பொல்லாத விபசாரச் சந்ததிக்கு அவருடைய உயர்த்தெழுதலின் அடையாளத்தை காண்பிப்பார் என்றும், அவர் மரித்த நிலையில் இல்லை. அவர் உயிரோடிருக்கிறார் என்று காண்பிப்பதாகவும் வாக்களித்திருக்கிறார். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுகிறார். உங்கள் மூலம் அவர் வாழ்ந்து அதை நிருபிக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்'' என்றும் இயேசு கூறினார் (யோவான் 14:19). இதை அவர் விசுவாசிகளுக்குக் கூறுகிறார். ''உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடிருந்து, உங்களுக்குள் இருப்பேன்'', நான் என்பது தனிப்பட்ட பிரதிப் பெயர். ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' (யோவான் 14:12). அதே கிரியைகள்! “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்”. 52சபையானது, வேதத்தில் கூறப்பட்டுள்ள முதலாம் சபை காலமாகிய எபேசு சபை காலத்தைக் கடந்த பின்பு, அநேக சபை காலங்களை கடந்து வந்துள்ளது. நான் இங்கிருந்து புறப்படும் முன்பு, கர்த்தருக்குச் சித்தமானால், 'கீழ் நோக்கி எண்ணுதல்' (The Countdown) என்னும் சிறு பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நாம் எங்ஙனம் வந்துள்ளோம், எங்ஙனம் முன்னேறியுள்ளோம் என்பதைக் குறித்து. இப்பொழுது கவனியுங்கள், சபையானது எபேசு சபை காலம், மற்றும் வெவ்வேறு சபை காலங்களின் வழியாக இருளின் காலமாகிய ஆயிரவருட இருளை அடைந்தது. பின்பு லூத்தர் முதலாம் சீர்த்திருத்தக்காரராக, நீதிமானாக்கப்படுதல் என்பதுடன் தோன்றினார். பின்பு வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்பதுடனும், பெந்தெகொஸ்தேயினர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதுடனும் தோன்றினர். சபையானது சிறுபான்மையோரைக் கொண்டதாக குறுகிக் கொண்டே வந்து, அதே சமயத்தில் கூடுதல் வல்லமை பெற்றதாக விளங்கினது. வெள்ளம் போல் சத்துரு வரும்போது, ''கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்''. (ஏசா. 59:19). 53இப்பொழுது நாம் பெந்தெகொஸ்தே காலத்திலிருந்து வெளி வந்துவிட்டோம். இப்பொழுது நாம் கூர்நுனிக் கோபுரத்தில் காணப்படுவது போல், நம்மிடையே நிலவி வரும் கூர்நுனிக் கோபுரப் போதனைகளல்ல, உண்மையான கூர்நுனிக் கோபுரத்தைக் குறிப்பிடுகிறேன், தலைக்கல் பொருந்த வேண்டுமானால், அது தீட்டப்பட வேண்டும், ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபைக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். தலைக்கல் வரும் போது, கிறிஸ்துவும், அதாவது கிறிஸ்துவின் ஊழியமும் கிறிஸ்துவும் பரிபூரணமாக ஒன்றுக்கொன்று இணைந்துவிடும். அது மீட்கப்பட்டவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டு வந்து, தேவனுடைய முழு வீட்டையும் மகிமைக்குள் பிரவேசிக்கச் செய்யும்; சீர்திருத்தக் காலங்களில் இருந்த மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், துன்புறுத்தப்பட்டு தேவனுடைய ராஜ்யத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர் அனைவரும். அந்த தலைக்கல் வந்து கொண்டிருக்கிறது. ஆம், ஐயா. அது நிச்சயம் வரும். தேவன் அதை அனுப்புவார். அது கட்டிடத்தின் மேல் இசைவாய் இணையும். பாருங்கள்? கிறிஸ்துவினிடமிருந்து வந்த ஊழியம் இப்பொழுது குறுகிக் கொண்டே வந்து, பரிசுத்த ஆவியின் பரிபூரணத்துடன் காணப்படும். கிறிஸ்துவின் பூரண ஊழியத்தை அடைந்து கொண்டிருக்கிற அடையாளங்களை நாம் காண்கிறோம்: அதே பரிசுத்த ஆவியானவர் லூத்தரின் கீழ் நீதி மானாக்கப்படுதல் என்பதை அளித்தார்; பின்பு வெஸ்லியின் கீழ் பரிசுத்த மாக்கப்படுதல்; இத்தகைய செய்திகள். அதன் பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இத்துடன் மூன்று. கிருபையின் மூன்று படிகள் அல்ல, ஆனால் மூன்று ஸ்தலங்கள் (stations) என்று அவைகளைக் கூறலாம். 54அது இது போன்றது. ஒரு குழந்தை பிறக்கும்போது, மூன்று காரியங்கள் பிறப்பின் போது நிகழ்கின்றன. சாதாரண பிரசவத்தின் போது... வயது வந்தவர்கள் இதை கூர்ந்து கவனிக்கவும். சிறுவர்களுக்கு இது புரியாது. சாதாரண பிரசவத்தின்போது முதலில் வெளி வருவது தண்ணீர், பிறகு இரத்தம், அதன் பிறகு ஜீவன். பாருங்கள்? மறுபிறப்பிலும் இவை மூன்றும் அடங்கியுள்ளன. தண்ணீர், இரத்தம், ஆவி. அவர் சரீரத்திலிருந்து புறப்பட்டு வந்த இம்மூன்றுமே, அவருடைய சரீரத்தை உண்டாக்குகின்றன. பாருங்கள்? அவருடைய மணவாட்டியை உண்டாக்க அவருடைய சரீரத்திலிருந்து புறப்பட்டு வந்த இம்மூன்றும் அவசியமாயுள்ளன, ஆதாமின் மணவாட்டி அவனுடைய சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டாள். கிறிஸ்துவின் மணவாட்டியும், அவருடைய சரீரத்திலிருந்து எடுக்கப்படுகிறாள். கிறிஸ்து மரித்த போது, அவருடைய சரீரத்திலிருந்து மூன்று பொருட்கள் புறப்பட்டு வந்தன தண்ணீர், இரத்தம், ஆவி. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல், தண்ணீர்; இரத்தத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல்; பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இந்த மகத்தான கடைசி படி பரிபூரணத்தை அடைய வேண்டும். பரிசுத்த ஆவி சபையில் மிகவும் பரிபூரணமாக வாழ்ந்து, அதன் விளைவாக தலையும் சரீரமும் ஒன்றாக இணைக்கப்படும். பாருங்கள்? பாருங்கள்? இது சரீரம். அவர் சரீரத்துக்கு தலையாயிருக்கிறார். இக்கடைசி நாட்களில் இது நிகழுமென்று அவர் வாக்களித்துள்ளதாக நாம் பார்க்கிறோம். 55இப்பொழுது யோனாவுக்கு வருவோம். அநேகர், “அவன் அவிசுவாசி'' என்று கூறுவதாக நான் ஏற்கனவே கூறினேன். இல்லை, அவன் அவிசுவாசி அல்ல. அவன் நினிவேக்குச் செல்ல வேண்டியவனாயிருந்தான். அது முற்றிலும் உண்மை. ஏனெனில் அது பாவம் நிறைந்த ஒரு பெரிய பட்டினமாயிருந்தது. ஒருக்கால் அதன் ஜனத்தொகை ஐந்து லட்சம் இருந்திருக்கும். அவர்கள் மிகவும் பொல்லாதவர்களாயிருந்தனர். அது சிறந்த வாணிபப் பட்டினம். அவர்களுடைய முக்கியத் தொழில் மீன் பிடித்தல் என்று நான் படித்திருக்கிறேன். அவன் அங்கு அனுப்பப்பட்டான். ஆனால் அவன் வேறு கப்பல் ஏறி தர்ஷீசுக்குப் புறப்பட்டான். அவன் அப்படி செய்ய நினைக்கவில்லை என்று அநேகர் கூற முயல்கின்றனர். அது அனைத்தும் தேவனால் திட்டமிடப்பட்டது. நான் ஒரு சிறு கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். யோனா செய்தது நியாயமென நான் இப்பொழுது கூறுவதற்கு அது ஆதாரமாய் அமைந்துள்ளது. 56யோனா தவறான கப்பலில் ஏறின போது, அவன் தவறான வழியில் சென்று, அதன் விளைவாக தொல்லைக்கு ஆளானான். காற்று அப்பொழுது பலமாக அடிக்கத் தொடங் கினது. அலைகள் கொந்தளித்து பயங்கரமாக இரைச்சலிட்டன. கப்பல் மூழ்கிவிடுமென்று எல்லோரும் கருதினர். ஆனால் யோனாவோ அயர்ந்த நித்திரையிலிருந்தான். அவர்கள், ''நீ நித்திரை பண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்'' என்றனர். யோனா தவறு செய்துவிட்டதாக அறிக்கையிட்டான். அவன், “என் கால்களையும் கைகளையும் கட்டி சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்'' என்றான். அவர்கள் அப்படியே செய்தனர். கர்த்தர் ஒரு பெரிய மீனை ஆயத்தம் பண்ணியிருந்தார். 57அண்மையில் ஒரு விஞ்ஞானி கென்டக்கியிலுள்ள லூயிவில் என்னுமிடத்தில் இவ்விதம் கூறக் கேட்டேன். நான் ஜெபர்ஸன்வில்லில் வசித்தேன். அது சிறிது தூரம் தான். அந்த விஞ்ஞானி திமிங்கிலத்தின் எலும்புக் கூட்டை வைத்து சொற்பொழிவாற்றி, திமிங்கிலத்திற்கு எத்தனை பற்கள் உண்டென்றும் இன்னும் அநேக காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். முடிவில் அவர், “யோனாவைக் குறித்து வேதத்தில் கூறப்பட்ட வரலாறு உண்மையல்ல'' என்றார். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் சற்று அருகில் சென்று, அவர் மேலும் என்ன கூறுகிறார் என்று கேட்க விழைந்தேன். அவர், “ஒரு திமிங்கிலம் யோனாவை விழுங்கினதாக வேத வரலாறு கூறுகின்றதல்லவா? நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். இந்த திமிங்கிலத்தின் தொண்டையின் வழியாக 'பேஸ் பந்து' (Base ball) கூட நுழைய முடியாது என்னும் போது, ஒரு மனிதன் எப்படி நுழைந்திருக்க முடியுமென்று யோசித்து பாருங்கள். அது தவறு'', என்றார். அந்த நாத்திகன் இத்தகைய காரியங்களைக் கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான், “ஐயா, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நீங்கள் எப்பொழுதாகிலும் வேதத்தைப் படித்ததுண்டா?'' என்று கேட்டேன். அவர், ''நிச்சயமாக'' என்று பதிலுரைத்தார். ''அப்படியிருந்தும் இவ்வாறு கூறுகின்றீரே! அது திமிங்கிலம் என்று கர்த்தர் கூறவில்லை, அது 'மீன்' என்று தான் கூறினார்'' என்றேன். அவர், “அது திமிங்கிலமாகத் தான் இருந்திருக்க வேண்டும்'' என்றார். நான், ''சரி, அது திமிங்கிலம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அது விசேஷமாக ஆயத்தம் பண்ணப்பட்டது. கர்த்தர் அவனுக்காக ஒரு மீனை ஆயத்தம் பண்ணினார். இது விசேஷமான ஒன்று. இந்த மோட்டார் வாகனம் அதன் தொண்டையில் புகக்கூடிய அளவுக்கு அவரால் ஒரு மீனை ஆயத்தம் பண்ண முடியும். அவர் தேவன், பாருங்கள். எனவே வேதத்தில் கூறப்பட்டது உண்மையே. கர்த்தர் யோனாவுக்காக ஒரு மீனை ஆயத்தப்படுத்தினார். அது விசேஷமான மீன், எனவே அது யோனாவை விழங்கின'' என்றேன். 58யோனா இந்த விசேஷமான மீனின் வயிற்றில் இருந்தான். அவன் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. அவன் எந்நிலையில் இருந்திருப்பான் என்று உங்களால் கற்பனை செய்ய முடியும். இந்த மீன், மற்றெல்லா மீன்களையும் போல், தன் ஆகாரத்திற்காக நீர் மட்டத்துக்கு வந்து, ஆகாரம் கிடைத்தவுடன் கடலின் அடியில் சென்றிருக்கும். உங்கள் பொன் மீன்களுக்கு ஆகாரம் போட்டு கவனித்துப் பாருங்கள். அதன் வயிறு நிரம்பினவுடனே, அது அடிமட்டத்துக்கு சென்று, தன் சிறு செதில்களை விரித்து இளைப்பாறுகிறது. ஏனெனில் அதன் ஆகாரத்தை அது பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த மீன் யோனா தீர்க்கதரிசியை விழுங்கினவுடனே கடலின் அடியில் சென்றிருக்க வேண்டும். அது உண்மையாக அப்படி சென்றதா என்று எனக்குத் தெரியாது. அது அடியில் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கிறேன். இந்த மனிதன் அங்கிருக்கிறான். 59நாம் எப்பொழுதுமே நமது அறிகுறிகளை (symptoms) மாத்திரமே யோசித்துக் கொண்டிருக்க விரும்புகிறோம், அல்லது சாத்தான் அவைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்க நாம் அனுமதிக்கிறோம். அவன், ''நேற்றை விட இன்று நீ சுகமாக இல்லையே! நீ சுகமாகவில்லை'' என்பான். நீங்கள் அறிகுறிகளைக் காண வேண்டாம். யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், அது யோனாவுக்கு தான். பாருங்கள்? அவன் எல்லா பக்கங்களிலும் மீனின் வயிற்றையே கண்டான். பாருங்கள்? ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? ''இவை பொய்யான மாயை'' என்றான். (யோனா 3:8.). அவன், ''அதையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன்'' என்று சொல்லவில்லை. அவன், “இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன்'' என்றான். (யோனா 2:4). ஏனெனில் சாலொமோன் ஜெபம் பண்ணி அந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, ''உமது ஜனங்கள் வியாகுலமடைந்து, இந்த ஆலயத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்டருளும்'' என்றான். யோனாவுக்கு சாலொமோனின் ஆலயத்தில் நம்பிக்கையிருந்தது. சாலொமோன் நம்மைப் போல இவ்வுலகைச் சேர்ந்த சாதாரண மனிதன். சிறிது காலம் கழித்து அவன் பின்வாங்கிப் போனான். ஸ்திரீகள் அவனை தேவனை விட்டு இழுத்துச் சென்றனர். ஆயினும் அவன் ஜெபத்தை தேவன் கேட்டார். யோனா தான் இருந்த சூழ்நிலையிலும் கூட விசுவாசத்தைப் பெற்றிருக்க முடிந்தது. 60அப்படியிருக்க, மனிதனால் கட்டப்பட்ட ஒரு ஆயலத்தை நோக்கிப் பார்க்க வேண்டிய அவசியமிராமல், பரலோகத்தையே நோக்கிப் பார்க்க வேண்டிய நமக்கு விசுவாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? பரலோகத்தில் தேவனுடைய குமாரன் தமது மகிமையின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து என்றென்றும் ஜீவிக்கிறவராய், தமது சொந்த இரத்தத்தின் மூலம் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறாரே! நமக்கு யாருக்குமே யோனாவுக்கிருந்த அறிகுறிகள் கிடையாது. ஜனங்கள் தேவனுடைய சமுகத்தில் எல்லா சமயங்களிலும் சுகம் பெறுவதை நாம் கண்டிருக்கிறோம். நாம் அறிகுறிகளை நோக்கக்கூடாது. அவை பொய்யான மாயை. வாக்குத்தத்தம் பண்ணின தேவனை நோக்கிப் பாருங்கள். 61அந்த தீர்க்கதரிசிக்கு தேவன் எப்படி பிராணவாயு கிடைக்கும்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவன் இரவும் பகலும் மூன்று நாள் உயிர் வாழ்ந்தான் என்று வேதம் கூறுகிறது. தர்ஷீசு பட்டினம் நினிவேயிலிருந்து கடல் வழியாக எவ்வளவு தூரம் என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், வேதத்தின்படி யோனா இரவும் பகலும் மூன்று நாள் மீனின் வயிற்றில் உயிரோடிருந்தான், அவன் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். “ஓ, அது கூடாத காரியம்'' எனலாம். லாசரு மரித்து நான்கு நாட்களான பின்பு, அவர் அவனை உயிரோடு வரும்படி அழைத்ததைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அது போன்று, நாம் மரித்து பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்திருந்தாலும், அவர் ஒரு நாளில் நம்மையும் அழைப்பார். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அது அவருக்கு ஒன்றுமில்லை. பாருங்கள், அவர் தேவனாயிருக்கிறார். 62அவன் நினிவேக்கு வருகிறான் என்று நாம் காண்கிறோம். ஒரு மீன் தண்ணீரில் நீந்தி வருகிறது, அவனுக்கு கடலின் அடியில் நினிவே வரை 'வாடகை கார்' சவாரி கிடைக்கிறது. அப்பொழுது பகல் நேரமாக இருந்திருக்கும். நினிவே ஜனங்கள் மீன் பிடிப்பவர்கள். அவர்கள் வலையை இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மீன் விற்று வாணிபம் செய்பவர்கள். அவர்கள் அஞ்ஞானிகள். அவர்கள் விக்கிரகங்களை வணங்கினர், அவர்களுடைய தெய்வங்களில் ஒன்று... இங்குள்ள அமெரிக்க இந்தியர்களுக்கு சாம்பல் நிறக் கரடி தெய்வமாயிருந்தது போல (உர்சஸ்?). இந்த அஞ்ஞானி இந்தியர்கள் கிறிஸ்தவர்களாகும் முன்பு இதை தான் வணங்கி வந்தனர். அது சக்திக்கு தெய்வமாயிருந்தது. 63நினிவேயில் திமிங்கிலம் கடல் தெய்வமாக வழிபட்டு வந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அது கடலின் எஜமானாயிருந்தது. அது எதை வேண்டுமானாலும் விழுங்கக் கூடும். ஏறக்குறைய பகல் வேளையில், அவர்களுடைய தெய்வம் தண்ணீரை விட்டு வெளிவந்து, தன் வாயைத் திறக்கிறது. தீர்க்கதரிசி அதை விட்டு வெளிநடந்து கரையை அடைகிறான். அவன் கூறினதை அவர்கள் நம்பினதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள்? அவர்கள் உறுதியாக விசுவாசிம் வைத்தனர். ஏனெனில் செய்தியையளித்த தீர்க்கதரிசி அவர்களுடைய தெய்வத்தின் வாயிலிருந்து புறப்பட்டு வந்து, “மனந்திரும்புங்கள், இல்லாவிட்டால் நினிவே அழிக்கப்படும்'' என்று அறை கூவினான். பாருங்கள்? எனவே அவன் கர்த்தருடைய சித்தத்துக்கு அப்பாற்பட்டவனாக இல்லை. ''தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்கிறார்''. என்னும் வசனத்திற்கேற்ப, இவனுடைய செயல் அமைந்திருந்தது. அது உண்மை. ''அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு,'' இயேசு அவனைக் குறிப்பிட்டார். ஜெப வரிசைக்காக, முடிப்பதற்கு முன்பாக, இன்னும் ஒன்றே ஒன்று. அவர் சாலொமோனையும் குறிப்பிட்டார். 64தேவன் இவ்வுலகிற்கு வரங்களை அனுப்பி, ஜனங்கள் அவைகளுக்கு மதிப்பு கொடுக்கும் போது, அது பொற்காலமாகத் திகழ்கின்றது. அதற்கு மாறாக அவர்கள் அதை புறக்கணிக்கும் போது, அது அவர்களுக்கு சாபமாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு காலத்திலும் அப்படியே நடந்து வருகிறது. அவர்கள் இயேசுவைப் புறக்கணித்த போதும், தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்த போதும் என்ன நேர்ந்ததென்று பாருங்கள். ஆனால் சாலொமோனின் காலத்தில் அவனுடைய வரங்கள் அனைத்தையும் அக்காலத்தவர் விசுவாசித்தனர். சாலொமோனுக்கு சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம் இருந்தது, தேவன் அதை அவனுக்கு அருளினார். ஜனங்கள் ஒரு மனதுடன் விசுவாசித்தனர். எபிரேய ஜனங்களுக்கு சாலொமோனின் காலம் செழிப்பின் காலமாக பொற்காலமாக இருந்தது. அப்பொழுது யுத்தங்கள் எதுவுமில்லை. தேவன் அவர்களை செழிக்கப் பண்ணினார். சாலொமோனின் காலத்தில் அவர்கள் ஆலயத்தைக் கட்டினார்கள். ஏனெனில் அவன் மாமிசத்தில் தாவீதின் குமாரனாக இருந்து, வரப்போகும் தாவீதின் குமாரனுக்கு முன்னடையாளமாயிருந்தான். ஆலயம் கட்டப்பட்ட அந்த காலத்தில் எல்லோருமே தேவன் அவனுக்கு அருளியிருந்த வரத்தை மதித்து, அவனை ராஜாவாக முடிசூட்டினர். அவனுடைய புகழ் எல்லாவிடங்களிலும் பரவினது. 65அமெரிக்கர்களாகிய உங்களுக்கு இதை கூற விரும்புகிறேன். தேவன் நமக்கு அனுப்பியுள்ள வரமாகிய பரிசுத்த ஆவிக்கு நாம் மாத்திரம் பதிப்பு கொடுப்போமானால், ருஷிய விண்வெளி வீரர்களைக் குறித்தும், அணுகுண்டுகளைக் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமது பாதுகாப்பு கிறிஸ்துவே. பாருங்கள்? அவரே நமக்கு பாதுகாவலனாய் இருக்கிறார். ஆனால் நம்மிடமுள்ள தொல்லை என்னவெனில், அவர் அனுப்பியுள்ள வரங்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறோம். அதனால் தான் நாம் நியாயத்தீர்ப்புக்காக வைக்கப்பட்டிருக்கிறோம். அது நம்மை தாக்கியே ஆகவேண்டும். தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. இந்த நியூயார்க் பட்டினத்தை, அமெரிக்காவை, உலகத்தை, தேவன் அது செய்த கிரியைகளுக்காக நியாயந்தீர்க்காமல் தப்பவிடுவாரானால், நீதியுள்ள தேவன் என்னும் முறையில், அவர் சோதோம் கொமோராவை மறுபடியும் எழுப்பி அதை தீக்கிரையாக்கினதற்காக அதனிடம் மன்னிப்பு கோர கடமைபட்டிருக்கிறார். நாம் இப்பொழுது செய்து வரும் அதே செயல்களை அவர்கள் புரிந்ததினிமித்தம், தேவன் அதை எரித்து போட்டார். பாருங்கள்? அது அவ்வாறே நிகழும் என்று. 66சாலொமோனின் காலத்தில் எல்லோருமே தேவனைக் குறித்து பேசி, ''ஓ, சாலொமோனின் மகத்தான சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம்'' என்று குறிப்பிடுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எல்லோருமே அந்த வரத்தைக் குறித்து சொல்லும் எவ்வித குழப்பமும் அப்பொழுது இருக்கவில்லை. எல்லோருமே அதை விசுவாசித்தனர். அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பரவினது. இஸ்ரவேல் தேசத்தைக் கண்டு எல்லா தேசங்களும் நடுங்கின. இஸ்ரவேலில் அவர்களைக் காட்டி அவர்கள் மத்தியில் இருந்தார் என்னும் காரணத்தால். அது தான் நடுக்கத்தை உண்டாக்கினது தேவன் அவர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்தார் என்பது. கிறிஸ்தவ நாடு என்று கூறிக் கொள்ளும் நமக்கு அது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்! ஸ்தாபனங்களும் மற்றவைகளும் நம்மை முறுக்கி, உருக்குலைந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்துவிட்டன. அதன் விளைவாக எதை விசுவாசிப்பதென்று எந்த மனிதனுக்கும் தெரியவில்லை. 67கவனியுங்கள், சாலொமோனின் புகழ் சேபா நாடு வரை எட்டினது. சேபாவின் ராஜஸ்திரீ அதை கேள்விப்பட்டாள். அவள் ஒரு அஞ்ஞானி. அந்த காலத்திலிருந்த ஒரே வழி... இன்றுள்ளது போல் அன்று தொலைக்காட்சியோ, செய்தித்தாள்களோ கிடையாது, அவர்கள் செய்தி அனுப்பக் கூடிய ஒரே வழி, வாயிலிருந்து செவிக்கு உரைத்தலே. ஒவ்வொரு முறையும் பயணிகளின் கூட்டம் வரும் போதும், இந்த ராஜஸ்திரீ, “நீங்கள் பாலஸ்தீனா வழியாகவா வருகின்றீர்கள்?'' என்று கேட்டிருப்பாள் என்பதில் ஐயமில்லை. ''ஆம்'' “அப்படியா? அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?” “ஓ, நீங்கள் அதை காண வேண்டும். அதைப் போன்று எதுவுமே கிடையாது. அந்த ஜனங்களின் மத்தியில் எழுப்புதல் உண்டாயிருக்கிறது. அது நாடு முழுவதும் நேர்ந்துள்ள விவகாரம். அவர்களுக்கு அற்புதமான எழுப்புதல் உண்டாயிருக்கிறது. அவர்களுடைய தேவன் அவர்களுடைய ராஜாவை அபிஷேகம் செய்திருக்கிறார். அவரிடம் சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றை இது வரை யாருமே கண்டதில்லை. அந்த ஞானத்தை எதுவுமே மிஞ்ச முடியாது. அவரால் எல்லாவற்றையும் பகுத்தறிந்து கூற முடிகிறது. அது மனிதனின் ஞானத்திற்கு அப்பாற்பட்டது. அது தேவனிடத்திலிருந்து வந்துள்ள பகுத்தறிவின் வரம். அவர்கள் எல்லோரும் அதை கேட்டனர். 68''விசுவாசம் கேள்வியினால் வரும்''. தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனால் நமக்கு விசுவாசம் வருகின்றது என்று நாமறிவோம். நாம் மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினர் என்று கேட்பதனால் அல்ல, தேவனுடைய வசனத்தைக் கேட்பதனால். “விசுவாசம் கேள்வியினால் (கேட்பதனால்) வரும்''. அவள் அதைக் கேட்டபோது, அவளுக்குள் பசி உண்டானது, இவைகளையெல்லாம் அவள் கேள்விப்பட்ட பின்பு, அவளுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்கு முன்பு, அவளே நேரடியாக சென்று அதை காண வேண்டுமென்று தீர்மானித்தாள். நாமும் அவ்வாறே செய்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! பாருங்கள்? யேகோவாவின் வல்லமையை அறிந்து கொள்ள அவளிடம் தீர்க்கதரிசிகள் எழுதின புத்தகச் சுருள்கள் வேதாகமம் இருந்தது என்பதில் ஐயமில்லை. 69அவள் புறப்படும் முன்பு அநேக காரியங்களை சமாளிக்க வேண்டியதாயிருந்தது. அவள் அஞ்ஞானி என்பதால், அவள் தன் பூசாரியிடம் சென்று அனுமதி பெற வேண்டியதாயிருந்தது. ஏனெனில் அவள் ராஜ ஸ்திரீயும், அவனுடைய சபையின் உறுப்பினருமாயிருந்தாள். அவள் பூசாரியிடம் சென்று, “குருவே, நான் இஸ்ரவேலுக்குச் சென்று, இந்த மகத்தான மனிதனாகிய சாலொமோனிடமிருந்து சிறிது அறிவைப் பெற்றுக் கொள்ளலாமா? அவருடைய தேவன் அவருக்கு ஞானத்தை அருளியுள்ளதாக கேள்விப்படுகிறேன்'' என்று கேட்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அந்தப் பூசாரி, “என் குழந்தையே, நீ இப்படி செய்ய நினைப்பாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. இன்று எவ்வாறுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். நான் ஆவிக்குரிய காரியங்களிலிருந்து கேலித்தனமான காரியங்களுக்கு இறங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறேன். இன்றைக்கு அதே ஆவி அவ்விதமாகவே கூறுகின்றது. அப்பொழுது அவள்... நீ போகக்கூடாது. அந்த ஜனங்கள் மூடபக்தி வைராக்கியமுள்ளவர்கள், அவர்கள் எல்லாவித அடையாளங்களிலும் மற்ற காரியங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் பிரயாணத்தில் கடல்கள் உலர்ந்து போனதாக அவர்கள் கூறுகின்றனர். அது ஒன்றும் உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை மாத்திரமே, அல்லது யாரோ பாடின ஒரு கவிதை. அதில் உண்மை எதுவும் இல்லை'' என்று அந்த பூசாரி கூறியிருப்பான். 70ஆனால் உண்மையான விசுவாசம் இருதயத்தில் எழும்போது, அவர்கள் பசியடைகின்றனர். அவர்கள் காண விரும்புகின்றனர். காலத்தின் திரைக்குப் பின்னால் நோக்கி, “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் எங்கு செல்கிறேன்?'' என்று அறிந்து கொள்ள விருப்பமில்லாதவர் இவ்வுலகில் யாருமே இல்லை எனலாம். இதுவரை எழுதப்பட்டுள்ள சிறந்த புத்தகங்கள் அனைத்திலும், ஒரே ஒரு புத்தகம் மாத்திரமே நீங்கள் யார் என்றும், எங்கிருந்து வந்தீர்கள் என்றும், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் தெரிவிக்கிறது. அது உண்மை. திரைக்குப் பின்னால் இதை நாம் காணும்படி அது செய்கிறது. 71சாலொமோன் செய்பவைகளை இந்த ராஜஸ்திரீ கேள்விப்பட்டு, ''நான் எப்படியாயினும் போக வேண்டும்'' என்று தீர்மானித்தாள். பேராயர் என்ன கூறினாலும், என்ன நேர்ந்தாலும், அவள் நிச்சயம் போக வேண்டும் என்று உறுதியான தீர்மானம் கொண்டாள். ஏனெனில் உண்மையான ஒன்றை காண வேண்டுமென்று அவள் விழைந்தாள். அந்த பூசாரி அவளிடம், ''மகளே, நீ ராஜஸ்திரீ. இப்படிப்பட்டவர்களுடன் நீ தொடர்பு கொள்ளவே கூடாது'', என்று கூறியிருப்பான். “என்னவாயிருப்பினும், நானும் மரிக்கவேண்டிய ஒருவள் தானே'' “அப்படி ஏதாகிலும் நேர்ந்திருக்குமானால், அது நமது சபையில் நிகழ்ந்திருக்க வேண்டும்''. அந்த ஆவி இன்னும் மரிக்கவில்லை. ”ஆம், அது நமது வழியாகவே வரவேண்டும். இல்லாவிடில், அது உண்மையல்ல''. அவள், ''என் சிறு வயது முதல் நான் பக்தியுள்ளவளாய் இருந்து வந்திருக்கிறேன். இந்த விக்கிரங்கள் அனைத்தையும் நான் கண்டிருக்கிறேன். இவையாவும் தெய்வங்கள் என்று நீர் சொல்லியிருக்கிறீர். என் பாட்டி இதை சேர்ந்தவர்களே. என் முப்பாட்டியும் அவர்கள் தாயாரும் கூட இதை சேர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் யாருமே ஜீவனின் அடையாளம் ஒன்றையுமே காண்பிக்கவில்லையே. அங்கு நடப்பது தான் 'ஜீவன்' என்று அவர்கள் சொல்கின்றனர்'' என்று பதிலுரைத்திருப்பாள். 72அந்த ராஜஸ்திரீயைப் போன்ற கருத்தையுடைய சிலர் நியூயார்க்கிலும் மற்றும் உலகின் இதர பாகங்களிலும் இப்பொழுது இருக்க வேண்டும். “நானே அதை காணவேண்டும். அந்த விக்கிரங்களை இப்பொழுது நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, நீங்கள் எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கின்றீர்கள், ஜெபப் புத்தகங்ளையும் படிக்கின்றீர்கள், ஆனால் இவைகளினால் என்ன பயன்? ஜீவனுள்ள அசைவு ஒன்றையும் என்னால் காண முடியவில்லையே, இது ஏதோ வேதசாஸ்திரம் கொண்டது. இவையனைத்தும் மரித்த நிலையில் உள்ளது, தேவன் எங்கிருக்கிறார் என்பதை காண என் உள்ளம் பசியாயுள்ளது.'' ஓ, தேவன் எங்கேயிருக்கிறார் என்பதைக் காண உலகம் பசி கொள்ளட்டும். அவர் அன்று தேவனாக இருந்திருப்பாரானால், இன்றும் தேவனாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர் மரித்துவிட்டார் என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? 'அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்று வேதம் கூறுகின்றது. 73கவனியுங்கள், அவளுடைய இருதயம் பசி கொள்ளத் தொடங்கினது. அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றிற்று. “நான் பணமும் வெள்ளைப் போளமும் கந்தவர்க்கமும் என்னுடன் கொண்டு செல்லப் போகின்றேன். அது உண்மையாயிருக்குமானால், அதை ஆதரிப்பேன். இல்லாவிடில் அதைவிட்டு வந்துவிடுவேன்.'' அவள் நிச்சயமாக பெந்தெகொஸ்தேயினருக்குப் போதிக்க முடியும். உங்களை 'உருளும் பரிசுத்தர்கள்' என்று அழைக்கும் ஸ்தாபனங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள். பாருங்கள்? ஓ, என்னே, ஞானத்தின் வரம் (gift) சபையிலுள்ளதாக கூறப்படுகின்றது; கவனியுங்கள். அது உள்ளதா என்று போதகர்கள் தீர்மானிக்கட்டும். அவள், ''நான் என்னுடன் என் வெகுமதிகளை (gifts) கொண்டு சொல்லப் போகின்றேன். அது உண்மையாயிராவிடில், அவைகளைத் திரும்ப கொண்டு வந்துவிடுவேன்'' என்றாள். அது நல்லது. அந்த சீமாட்டி புறப்பட ஆயத்தமானாள். அவள் சில மந்திரிகளையும், தோழிகளையும், பணத்தையும் கொண்டு சென்றாள். 74அது உண்மையா இல்லையா என்று அறிந்து கொள்ள அவள் பயணப்பட்டு செல்ல வேண்டிய தூரத்தை சற்று சிந்தித்து பாருங்கள். பாலஸ்தீனாவிலிருந்து சேபா நாடு வரையுள்ள தூரத்தை உங்கள் உலக வரை படத்தில் (map) அளந்து பாருங்கள். ஒட்டகத்தின் மேல் பயணம் செய்தால் அது மூன்று மாதங்கள் பிடிக்கும். அவளுக்கு பயணத்தில் தொல்லைகள் ஏற்பட்டன. நாம் இப்பொழுது வருவது போல், அவளால் ஏர் கண்டிஷன் காடிலாக் காரில் வர முடியவில்லை. ஆயினும் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க, நாகரீகத்தின் ஒரு எல்லையிலிருந்து அவள் பயணப்பட்டு வந்தாள். ஆனால் அதை காட்டிலும் பெரிதான ஒன்றைக் கேட்பதற்கு தெரு முனையிலுள்ளவர்களும் கூட வருவதில்லை. ''அவள் கடைசி நாட்களில் எழுந்து நின்று இந்த சந்ததியார் மேல் குற்றஞ் சுமத்துவாள்'' (மத். 12:42) என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவளுக்கு வழியில் தொல்லை ஏற்பட்டது. இஸ்மவேல் புத்திரர் வனாந்தரத்தில் கொள்ளைக்காரராயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த பெரிய கொள்ளைக் கூட்டம் இந்த ராஜஸ்திரீயின் மேலும், அரை டஜன் மந்திரிகள் கொண்ட பரிவாரத்தின் மீதும் விழுந்து அவர்கள் கொண்டு சென்ற பொக்கிஷங்களை கொள்ளையடிப்பது எவ்வளவு சுலபம்! 75எப்படியாயினும், இருதயமானது தேவன் மேல் பசியுற்றால், எப்படிப்பட்ட தொல்லைகளும் சாதாரணமாகத் தென்படும். யார் உங்களை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், உங்கள் சிந்தனை அவர் மேலேயே சார்ந்திருக்கும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் உங்களுக்கு விரோதமாக கூறட்டும், உங்கள் வழியில் எந்த இடறலையும் போடட்டும். ஆனால் நீங்கள் மாத்திரம் தேவன் பேரில் தாகம் கொண்டிருந்தால், அதை எங்காவது கண்டுபிடிப்பீர்கள். அவ்வளவுதான், எதுவும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது. மனைவி உங்களை தடுத்து நிறுத்த முடியாது, கணவன் உங்களை தடுத்து நிறுத்த முடியாது, சபை உங்களை தடுத்து நிறுத்த முடியாது, போதகர் உங்களை தடுத்து நிறுத்த முடியாது. எதுவுமே ஒரு பரிசுத்தவானை தேவனிடமிருந்து தடுத்து நிறுத்த முடியாது. அவள் அதையெல்லாம் சிந்திக்கவேயில்லை. 76நீங்களும் அவ்வாறே, அவர் என்ன கூறுவார், தாயார் என்ன கூறுவார், தந்தை என்ன கூறுவார், கணவர் என்ன கூறுவார் என்று சிந்திக்கவே மாட்டீர்கள். இயேசு கிறிஸ்துவை நீங்கள் உண்மையானவராக, ஜீவிக்கிறவராக கண்டு கொண்டால், எதுவுமே உங்களை தடுத்து நிறுத்த முடியாது. உலகத் தோற்றத்துக்கு முன்பாக தெரிந்து கொள்ளப்பட்ட அந்த வித்தில் பசியுண்டாகி, வெளிச்சம் அதன் மேல் படும்போது, அது உடனே உயிர் பெறுகிறது. இந்த ஸ்திரீ அஞ்ஞானியாயிருந்தாலும், அந்த வித்திற்கு அவள் முன்னடையாளமாகத் திகழ்கின்றாள். கவனியுங்கள், அவள் ஒருக்கால் இரவில் பயணம் செய்திருக்கக் கூடும். ஏனெனில் சகாரா பாலைவனம் மிக வெப்பமான இடம். அவள் புத்தகச் சுருள்களை படித்துக் கொண்டே சென்றிருப்பாள். ''தேவன் யாரென்று தீர்க்கதரிசிகள் கூறுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொள்ளட்டும்''. ''நான் இருதயத்தின் இரகசியங்களை அறிவிப்பேன். உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன், அவன் சொல்லும் காரியம் நிறைவேறினால், அவனுக்கு செவி கொடுங்கள்'' என்று எழுதியிருக்கிறதே. அங்கு நான் அடைந்த பிறகு, ''அதை நான் அறிந்து கொள்வேன். தேவன் அப்படிப்பட்டவர் தானா என்று கண்டுகொள்வேன்'' என்று மனதில் எண்ணியிருப்பாள். 77இப்பொழுது கவனியுங்கள், முடிவில் எழுப்புதல் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். அவள், ''சில நிமிடங்கள் அங்கு உட்கார்ந்து பார்க்கிறேன். என் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகாத ஏதாவதொன்றை பிரசங்கியார் சொன்னால் நான் எழுந்து போய்விடுவேன்'' என்று கூறவில்லை. அப்படிப்பட்டவர்களை நியாயந்தீர்க்க அவள் நியாயத்தீர்ப்பின் போது இருப்பாள். அவள் உறுதி கொள்ளும் வரை அங்கிருந்தாள். நாமும் அவளைப் போலவே பயபக்தியுடனும் அமரிக்கையுமாயிருப்போமானால் எவ்வளவு நலமாயிருக்கும்! “இது ஒருக்கால் உண்மையாயிருக்கலாம். இதை நான் குற்றப்படுத்தப் போவதில்லை. நான் அமரிக்கையாக அமர்ந்திருந்து கவனிக்கப் போகிறேன். பின்பு இதை வேதவாக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இது உண்மையா என்று அறிந்து கொள்வேன்,'' அப்படி செய்ய நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 78இவள் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். அவள் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தை அடைந்து அங்கு கூடாரம் போட்டிருப்பாள். ஒருக்கால்... இதை சிறுவர்களுக்கு நாடக ரீதியில் கூறப் போகிறேன். அன்று காலை ஆலயம் திறக்கப்பட்ட போது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதி, இசைக் கருவிகளும் இசைத்திருக்கும். எல்லோரும் அங்கு ஒன்றுகூடினர். அவளுக்கு பின்னால் உட்கார இடம் கிடைத்திருக்கும். சாதாரணமாக அப்படித்தான் நடப்பதுண்டு. அவள் மிகவும் பின்னால் சென்று உட்கார்ந்து கொண்டாள். போதகர் சாலொமோன் வந்த போது அவள் கவனித்துக் கொண்டேயிருந்தாள். அவர் ஜனங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவர் ஜனங்களிடம் பேசி, பிறகு வேதத்திலிருந்து ஒரு பாகத்தைப் படித்தார். அவர்கள் ஜெபம் செய்தனர். அதன் பின்பு முதலாம் 'கேஸ்' (case) அவருக்கு முன்னால் வந்தது. அவள், “பகுத்தறிவின் வரம் எவ்வளவாக கிரியை செய்கிறது பார்க்கலாம்'' என்று எண்ணியிருப்பாள். 79அது நன்றாக கிரியை செய்வதை அவள் கண்டாள். எனவே அடுத்த கூட்டத்தின் போது, அவள் சில ஆசனங்கள் தள்ளி முன்னால் வந்து உட்கார்ந்தாள். ஒருக்கால் அவள்... இது தேவ தூஷணமாகத் தென்பட்டால் என்னை மன்னிக்கவும், ஒருக்கால் அவளுடைய ஜெப அட்டை அன்று மாலை கூப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். அவள் சற்று காத்திருக்க வேண்டியதாயிருந்தது. நான் ஜனங்களுக்கு இதை புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன். ஒருக்கால் அது அப்படி நடந்திருக்காது. அவள் ஒவ்வொரு 'கேஸ்'ஸையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தாள். அவள் உறுதியாக நம்பினாள். அவளுடைய தருணம் வரும் வரை அவள் காத்திருந்தாள். அது தான் அவள் விரும்பியது. ''அவள் சாலொமோனிடத்தில் வந்த போது, அவள் மனதிலிருந்த கேள்விகளையெல்லாம் அவன் விடுவித்தான். அவன் விடுவிக்கக் கூடாதபடிக்கு ஒன்றாகிலும் மறைபொருளாயிருக்கவில்லை'' என்று வேதம் கூறுகிறது. (1 இராஜா. 10:2-3). அவள் வாழ்க்கையில் தேவையாயிருந்த அனைத்தையும் கர்த்தர் சாலொமோனுக்கு வெளிப்படுத்தினார். அவன் அதை அவளுக்கு எடுத்துரைத்தான், அவளுக்கு இது நேர்ந்த போது, அவள் எழுந்து நின்று, “நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையே, அதை விட இது அதிகமாயிருக்கிறது. தினந்தோறும் இங்கு உட்கார்ந்து கொண்டு, இந்த மகத்தான வரம் மகத்தான அடையாளம் கிரியை செய்வதை காணும் மனிதர் பாக்கியவான்கள்'' என்றாள். அவள் தேவனை ஏற்றுக் கொண்டாள். அவள் தத்ரூபமான ஒன்றைக் கண்டாள். அவளுடைய இருதயம் உணர்ச்சி மிகுதியால் துடித்தது. உண்மையான ஒன்றை அவள் கண்டு கொண்டாள். உயிரற்ற கோட்பாடுகள், விக்கிரங்கள் அல்லாத ஒன்றை ஜீவனுள்ள தேவனை அவள் கண்டு கொண்டாள். 80எனவே, “நியாயத்தீர்ப்பு நாளிலே தென் தேசத்து ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள். ஏனென்றால் அவள் பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்'' (மத். 2:42) என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு இம்மானுவேலாக இயேசு கிறிஸ்துவாக தோன்றின நாட்களில்; ''தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்'' (2 கொரி. 5:19). அவர் அப்பொழுது ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தார். அந்த நாளில் அப்படிப்பட்ட ஊழியத்தை பழித்த எவரையும் அவர் மன்னித்துவிடுவார். ஆனால் ''பரிசுத்த ஆவி வந்த பிறகு...'' நீங்கள் அவர்களை காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகள் கூடுதலாக வேதத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கின்றீர்கள். பரிசுத்த ஆவி இவ்வுலகில் அசைவாடத் தொடங்கின முதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த சந்ததியார் மேலேயே அவள் குற்றஞ் சுமத்துவாளானால், இந்த சந்ததியார் மேல் அவள் என்ன செய்வாள்? இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்! அந்த ஸ்திரீ, உண்மையான ஒன்றைக் கண்டாள். 81இந்த சிறு சம்பவத்தை நான் முன்பே கூறியுள்ளேன், ''ஆனால் நான் ஜெப வரிசையை அழைக்கும் முன்பு இதை இப்பொழுது மீண்டும் கூறுவது பொருத்தமாயிருக்கும்“ என்று எண்ணுகிறேன், எனக்கு வேட்டையாட மிகவும் பிரியம். அது என் இரண்டாம் இயல்பு. எனக்கு அது அதிக பிரியம். என் இரட்சிப்பு அதை என்னை விட்டு எடுத்துப் போடவில்லை. காட்டிற்கு சென்று இந்த வடபாகத்திலும், அடிரன்டாக் மலைகளிலும் அநேக ஆண்டுகளுக்கு முன்பே நான் வேட்டையாடுவது வழக்கம். அங்கு நான் மலையுச்சிக்கு சென்று சூரியன் உதயமாவதையும் மறைவதையும் கண்டு, அநேக வாரங்கள் அங்கு தங்கியிருந்து அழுது, தேவன் என்னுடன் இயற்கையின் மூலம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அங்கு தானே அவர்... எனது முதல் வேதாகமம் இயற்கையே. ஒரு சிறு விதை பூமியில் விழுந்து, அந்த ஆழத்தில் உறைந்து, பிறகு வெடித்து, அதை சுற்றியுள்ள சதை பாகம் (pulp) மறைந்துவிடுகிறது. நாம் காணக்கூடிய எல்லா அடையாளமே அதை விட்டு போய்விடுகிறது. ஆனால் வசந்த காலத்தின் போது அது மீண்டும் உயிர் பெறுகிறது. பாருங்கள்? அதற்கான ஒரு வழியை தேவன் வகுத்துள்ளார். அந்த வித்து மீண்டும் உயிர் வாழ தேவன் ஒரு வழியை வகுத்துள்ளார். அப்படியானால் நானும் மீண்டும் உயிர் வாழ ஒரு வழி இருக்க வேண்டுமே என்று எண்ணலானேன். அது உண்மை, அதுவே என் முதல் வேதாகமமாக அமைந்திருந்தது. 82ஒரு அமெரிக்க வாலிபனுடன் நான் வேட்டையாடுவது வழக்கம். அவன் சிறந்த வேட்டைக்காரன், ஆனால் கொடூரமானவன். அவன் ஒரு விதத்தில் நல்லவன். அவனுடன் வேட்டையாடுவதற்கு அவன் நல்லவன். அவனால் எவ்வித தொந்தரவும் கிடையாது. அவன் எங்கிருக்கிறான் என்று அவனுக்குத் தெரியும். ஆயினும் அவன் இருதயம் மிகவும் கொடூரமானது. அநேக முறை நான், “நீ ஏன் இவ்வளவு கொடூரமாயிருக்கின்றாய் என்று அவனைக் கேட்டதுண்டு. அவனைக் கேலி செய்கிறேன் என்று எண்ண வேண்டாம். அவன் கண்கள் பல்லியின் கண்களைப் போல் இருக்கும். அவன் என்னிடம், “சரி தான் போதகரே! அதை என்னிடம் கூற வேண்டாம். நீங்கள் ஒரே நேரத்தில் போதகராகவும் வேட்டைக்காரராகவும் இருக்க முடியாது'' என்று கூறியிருக்கிறான். அவன், ''நீங்கள் இளகிய மனம் படைத்தவர்கள்'' என்பான். எனக்கு வருத்தம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக அவன் மான் குட்டிகளைக் கொல்லுவான். 83அந்த சிறு குட்டிகளைக் கொல்வது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஒரு மான் குட்டியைக் கொல்லலாம் என்று சட்டமிருப்பதால், அதை கொல்லலாம். ஆனால் வேடிக்கைக்காக அதை கொல்வதென்பது தவறு, ஆபிரகாம் கன்றுக் குட்டியைக் கொன்றான். கர்த்தர் அதை புசித்தார். அதில் தவறொன்றுமில்லை. எனவே அது மிருகத்தின் அளவைப் பொறுத்தல்ல. ஆனால் நீசத்தனமாக அதை கொல்வதென்பது என்னைப் பொறுத்த வரையில் கொலைக்கு சமமாகும். அந்த மான் குட்டி உயிர் வாழ வேண்டுமென்பதே என் கருத்து. ஆனால் சட்டம் அதை கொல்ல அனுமதிப்பதால், சட்டத்தின்படி அது சரியே. நான் பாப்டிஸ்டு சபையில் போதகராக இருந்தபோது, ஏழு ஆண்டு காலமாக காட்டு அதிகாரியாக இருந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். இந்த மனிதன் மிகவும் கொடூரமானவன். ஒரு முறை நான் அவனுடன் வேட்டையாடச் சென்றிருந்த போது, அவன் ஒரு ஊதலைக் கொண்டு வந்திருந்தான். 84நான் பாப்டிஸ்டு ஜனங்களை குறை கூறுவதாக எண்ண வேண்டாம். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நான் சுவிசேஷ ஊழியத்திற்கு செல்லாத சமயம் அது. அந்த சமயத்தில் நான் வேலை செய்ய விரும்பினேன். நான் எப்பொழுதுமே சுவிசேஷ ஊழியத்திற்கு செல்லும் வரை வேலை செய்வது வழக்கம். என் வாழ்க்கையில் ஒரு முறையாவது எனக்காக நான் காணிக்கை எடுத்ததேயில்லை. அது உண்மை. பாருங்கள்? நான் ஒருவரையும் ஒரு பைசா கேட்பது கிடையாது. என் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட நிலையையடையும் தருணம் வரும் போது, நானும் சாமுவேலைப் போல், “நான் கர்த்தரின் நாமத்தில் உரைத்த ஒன்றாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா? என் ஜீவனத்திற்காக நான் யாரிடமாவது பணம் வாங்கினதுண்டா?'' என்று கேட்க விரும்புகிறேன். பாருங்கள், அது உண்மை. அவர்கள், ”இல்லை'' என்று சாமுவேலுக்கு பதிலுரைத்தனர். ஆயினும் அவர்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஒருக்கால் அப்படியே அது முடிவு பெறலாம். வழக்கமாக அப்படித்தான் நடக்கிறது. 85இந்த வேட்டைக்காரத் தோழன் மேல் எனக்குப் பிரியம். ஒரு இலையுதிர் காலத்தில் நாங்கள் வேட்டைக்காக மலையின் மேல் சென்றிருந்த போது, அவன் ஒரு ஊதலை செய்து கொண்டு வந்திருந்தான். அதை அவன் ஊதும்போது, ஒரு மான் குட்டி தன் தாய்க்காக அழும் சத்தத்தைப் போன்று அதில் சத்தம் எழுந்தது. அவன், ''பில்லி, உம்மிடம் ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன்'' என்றான். அவன் கையில் இந்த ஊதலை வைத்திருந்தான். நான், ''அதை நீ ஊதக் கூடாது'' என்றேன். அவனோ, “நீர் உம்முடைய உணர்ச்சியை மேற்கொள்ளவேமாட்டீர்'' என்றான். நான், “இல்லை, ஐயா. அப்படியல்ல'' என்றேன். நாங்கள் வேட்டைக்காகச் சென்ற சமயம், வேட்டை காலம் முடிவடையும் தருணம். நான் மேலே செல்ல வேண்டியதாயிருந்தது... இங்குள்ள வேட்டைக்காரர் அனைவரும் வெள்ளை வால் மானை அறிவீர்கள். அவை பயந்தால், அதன் பின்பு தப்பி ஓடுவதில்லை. எனவே அவை சுட்டுக் கொல்லப்பட்டிருந்தன. தரையில் 4 அல்லது 5 அங்குலத்திற்கு சிறிது பனி காணப்பட்டது. அதை தென் பாகத்திலுள்ளவர்கள் 'ஸ்கிஃப்ஸ்' (skiff) என்று அழைப்பதுண்டு. பாதையில் நடந்து செல்வதற்கு அது சரியாயிருந்தது. நாங்கள் அரை நாள் அங்கு மானுக்காக தேடிக் கொண்டிருந்தோம். நான் நினைத்தேன்... 86எங்களுடன் சூடான சாக்கலேட் பானம் நிறைத்த தெர்மாஸ் கூஜாவையும் சான்ட்விச்சையும் நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். சாக்கலேட் சிறந்த எரி பொருள். நாங்கள் வழக்கமாக உட்காருவோம். பின்பு நாங்கள் மலையுச்சியைடைந்து, அவன் ஒரு பக்கம் செல்வான், நான் மற்றொரு பக்கம் செல்வேன். சில நேரங்களில் இரவில் அவன் அங்கேயே தங்கிவிடுவான். எனவே நான் நினைத்தேன்... அப்பொழுது மணி சுமார் பதினொன்று இருக்கும். அங்கிருந்த பனிக்கரையில் (Snowbank) அவன் உட்காருவான் என்று நினைத்தேன். அது ஒரு சிறிய ஸ்தலம். இந்த அறையின் இரு மடங்கு இருக்கும். அவன் அங்கு உட்கார்ந்தான். நாங்கள் உணவை அருந்தப் போகிறோம் என்று நினைத்து, நான் உணவை பையிலிருந்து வெளியே எடுக்கப் புறப்பட்டேன். அப்பொழுது அவன் ஊதலை வெளியே எடுத்து அதை ஊத ஆயத்தமானான். மான்கள் பயந்த சுபாவம் கொண்டதால், வேட்டை காலத்தின் போது அவை புதர்களில் பதுங்கியிருக்கும். ஏனெனில் அவை உயிர் தப்பிக்க வேண்டும். இவன் ஊதலை ஊதின போது, ஒரு பெரிய பெண் மான் திறந்த வெளியில் அங்கு வந்து நின்றது. அந்த பெண் மான் ஒரு தாய் மான். அது நின்றது. நான் அதை உற்று நோக்கினேன். அது மிகவும் அழகாயிருந்தது. அதன் பெரிய காதுகளுடனும், பெரிய பழுப்பு நிறக் கண்களுடனும் அது அழகாக காட்சியளித்தது. தன் குட்டியை அது தேடத் தொடங்கினது. இவன் என்னை இப்படி பார்த்தான். நான், “பெர்ட், நீ நிச்சயமாக அதை சுட்டுக் கொல்லமாட்டாய்'' என்று மனதில் எண்ணினேன். அவனோ துப்பாக்கியில் தோட்டாவைப் போட்டான். அவன் குறிதவறாத சிறந்த வேட்டைக்காரன். 87அவனை நான் கவனித்தேன். அவன் ஊதலை ஊதினான். அந்த பெண் மான் காலை பதினொன்று மணிக்கு அந்த திறந்த வெளியில் வந்து நின்றது. அது வழக்கமில்லாத ஒன்று, மான்கள் பகல் நேரத்தில் அதுவும் முக்கியமாக வேட்டை காலத்தில் வெளியே வருவதே கிடையாது. ஆனால் இந்த தாய் மானோ பதுங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தது, ஏன்? ஏனெனில் அது ஒரு தாய். அதன் சுபாவம் தாயின் சுபாவமாக இருந்தது. அதன் இருதயத்தில் அது தாய் பாசம் கொண்டிருந்தது. எனவே அதன் குட்டிக்கு தொந்தரவு ஏற்பட்டு, அது சத்தமிட்டு தாயைக் கூப்பிட்டதாக அது எண்ணினது. ஆகையால் அது குட்டியைத் தேடி வந்தது. “குட்டியைத் தேடி வந்த தாய் மானைக் கொல்வதற்கு நீ அவ்வளவு கொடூரமானவன் அல்ல'' என்று மனதில் நான் எண்ணினேன். அவனோ தன் பல்லி கண்களால் என்னை இப்படி பார்த்தான். அவன் துப்பாக்கியை எடுத்தான். ”ஓ, அவன் நிச்சயமாக சுடமாட்டான்'' என்று நான் நினைத்தேன். அந்த தீரமான தாயும் வெளி நடந்து வந்து அங்கு நின்று கொண்டிருந்தது. 88அவன் தோட்டாவை துப்பாக்கியில் நிறைத்து அதை பூட்டினான். பூட்டின சத்தத்தை அந்த பெண் மான் கேட்டவுடன், அது திரும்பி வேட்டைக்காரனை உற்று நோக்கினது. அவன் துப்பாக்கியை உயர்த்தினான். அதிலிருந்த தொலை நோக்கியிலுள்ள குறுக்கு இழை சரியாக அதன் உத்தமமான இருதயத்தில் மையம் கொண்டது. ''ஓ, அந்த சக்தி வாய்ந்த துப்பாக்கி அந்த பெரிய தோட்டாவை சுடும்போது, அதன் இருதயம் நிச்சயமாக பிளந்துவிடும்'' என்று பயந்தேன். நான், ''நீ எப்படி இதை செய்யலாம்? குட்டி அழுவது போல் ஓசை எழுப்பி, அந்த தாய் மானை ஏமாற்றி வெளியே வரும்படி செய்து, பாசம் கொண்ட அந்த உத்தமமான இருதயம் துடிதுடிக்கும் போது, அதை சுட்டுக் கொல்லலாமா? அவ்வளவு கொடூரமாக உன்னால் எப்படி இருக்க முடியும்?'' என்று மனதில் எண்ணினேன். அவன் துப்பாக்கியை சமப்படுத்தினான். சாதாரணமாக இத்தகைய சூழ்நிலையில் அது ஓடி மறைந்துவிடும். ஆனால் இதுவோ அசையாமல் நின்றது. அது சாக பயப்படவில்லை. ஏனெனில் அதன் குட்டி ஆபத்தில் சிக்கிக் கொண்டதாக அது எண்ணினது. பாருங்கள், அது அன்பு கொண்டது போல் பாசங்கு செய்யவில்லை. அது அவ்வாறு நடிக்கவில்லை. அது மரண வேளை. பாருங்கள்? அதற்கு இதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தாய். அது தாய் சுபாவம் கொண்டது, அது குட்டியை தேடினது. குட்டி அழுதது போன்ற உணர்ச்சி. எனவே குட்டியை தேடி அது வந்தது. 89அவன் அதை சுட்டுக் கொல்வதைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. நான் என் தலையை மறுபக்கம் திருப்பி ஜெபம் செய்யத் தொடங்கினேன். நான், ''கர்த்தராகிய இயேசுவே, அவன் அப்படி செய்ய அனுமதியாதேயும். அப்படி செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது? அந்த ஏழை தாய் அங்கு நின்று கொண்டிருக்கிறதே! அவன் அதன் இருதயத்தை பிளந்து விடுவானே!'' என்று ஜெபம் செய்தேன். நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவேயில்லை. நான் திரும்பி பார்த்த போது, துப்பாக்கி அவன் கையிலிருந்து கீழே நழுவிக் கொண்டிருந்தது. அவனால் அதை பிடிக்க முடியவில்லை. அவன் திரும்பி என்னைப் பார்த்தான். ''கோணலான அவன் கண்களிலிருந்து கண்ணீர் மல்கி, கன்னங்களில் வடிந்து கொண்டிருந்தது. அவன் துப்பாக்கியை தூர எறிந்தான். பனி பெய்திருந்த அந்த இடத்தில், அவன் என் காலைப் பிடித்துக் கொண்டு, பில்லி, எனக்கு இது போதும், எனக்கு இது போதும், நீர் எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கும் அந்த இயேசுவிடம் என்னை வழி நடத்தும்'' என்று மன்றாடினான். என்ன நேர்ந்தது? அவன் தத்ரூபமான ஒன்றைக் கண்டான். ஏதோ பாசாங்கு செய்யும் ஒன்றையல்ல. ஓ, நாமும் அந்த தாய் மானைப் போன்ற இருதயம் கொண்ட கிறிஸ்தவர்களாக ஆனால்! பாருங்கள்? ஆயினும் இயேசு, “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங் கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்'' என்றார். (ஏசா. 49:15-16). சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். 90நாம் துரிதப்படும் இந்நேரத்தில் எத்தனை பேர் தேவ சமுகத்தில் துரிதமாக, “தேவனே, அந்த மான் தாயாக இருந்தது போல, என்னையும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக மாற்றும்படி வேண்டிக் கொள்கிறேன். என்னை பயமில்லாதவனாகச் செய்யும்... அந்த பெண் மான் தன் குட்டியை நேசித்தது போல நானும் நேசிக்க விரும்புகிறேன்'' என்று சொல்வீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள்... கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக! கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக! அத்தகைய அன்பு காணப்படட்டும். 91எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பவர்களில் நூற்றுக் கணக்கானோர் தங்கள் கரங்களையுயர்த்தி, அந்த அனுபவத்தைப் பெற விரும்புவதாக தெரிவித்தனர். அந்த பெண் மான் அப்படிப்பட்ட தீர செயலைப் புரிந்த காரணம், அது தாய் என்பதால் அது தாய் சுபாவம் கொண்டதாயிருந்தது. ஓ, தேவனே, எங்களையும் நல்ல சுபாவம் கொண்ட கிறிஸ்தவர்களாக மாற்றும். ஏதோ ஒன்றை நாங்கள் பாசாங்கு செய்து, ''நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்'' என்று சொல்வதல்ல. ஆனால் உண்மையில், இருதயத்தில் நாங்கள் கிறிஸ்தவர்களாகும்படி செய்யும். உமது வார்த்தையையும் அன்பையும் எங்கள் இருதயங்களில் பதித்தருளும். ஆண்டவரே, நாங்கள் உலகத்திற்கு கிறிஸ்தவ மார்க்கத்தின் தன்மையையும் தெய்வீக அன்பையும், தாய் உணர்ச்சியையும் வெளிப்படுத்திக் காண்பிக்க அருள் புரியும். பிதாவே, இதை அருளும். கையுயர்த்தின ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டுதல் செய்கிறேன். இந்த அனுபவம் அவர்களுக்கு உண்டாவதாக. 92ஒருக்கால் ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்வதைத் தவிர வேறொன்றையும் அறியாதவர் இங்கிருக்கக் கூடும். அவர்கள் தத்ரூபமான எதையும் கண்டதில்லை. ஆனால் சாலொமோனிலும் பெரியவர் அந்த இயேசுவே இங்கிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இங்கு காத்திருக்கும் சபையோர், இன்றிரவு ஜெப வரிசையை கவனித்துக் கொண்டிருக்கும் போது, தேவனுடைய அன்பும், தேவனுடைய சத்தியமும் வெளிப்படுவதைக் கண்டு, உமது வார்த்தை சத்தியமென்றும், நீர் மரிக்கவில்லையென்றும், நீர் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறீர் என்றும் அறிந்து கொள்வார்களாக. அதை அவர்கள் காணும்போது, தங்கள் ஜீவியத்தை உமக்கு முழுவதுமாக அர்ப்பணித்து, உமது பிள்ளைகளாக ஆகி, தங்கள் இருதயங்களில் அன்பு கொண்டவர்களாய், பயமின்றி மரணத்தையும் சந்திக்கும்படியான நிலையையடைய அருள் புரியும். ''நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்படேன்'' என்று தாவீது கூறினான். அந்த தாய் மான் காட்டிலிருந்து வெளியே வந்து திறந்த வெளியில் மரண இருளுக்குள் பிரவேசித்தது. தாவீது, ''நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடப்பேன். நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்'' என்றான். தேவனே, அவ்வாறே நாங்கள் இருக்க விரும்புகிறோம், ஆண்டவரே இதை அருள்வீராக! இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 93கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! உங்களை இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன், பேச தொடங்கினால் என்னால் முடிக்கவே முடியவில்லை. இப்பொழுது நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகின்றோம். சில நிமிடங்கள் உங்கள் இருக்கைகளிலே அமர்ந்திருங்கள், இன்றிரவு ஜெப வரிசை வைக்கலாம் என்று நான் வாக்களித்துள்ளேன். நான் ஜெப வரிசை ஏற்படுத்த விரும்புகிறேன். இதைக் காட்டிலும் சீக்கிரமாக நாம் முடித்திருக்க வேண்டும். ஆனால் நாமோ... அரங்கத்தின் காவலரே, நீர் விளக்குகளை அணைக்காமலிருந்த தயையை பாராட்டுகிறோம். தேவனுடைய ஒளி உங்கள் வாழ்க்கையில் பிரகாசித்து அது ஏற்கனவே பிரகாசிக்காமலிருந்தால் உங்களை என்றாவது ஒரு நாளில் மகிமைக்குக் கொண்டு செல்வதாக. 94பில்லி எங்கே? என்ன அட்டை கொடுத்தாய்? ஏ, ஒன்று முதல் நூறு அட்டைகள். சரி. அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நாம் துரிதப்படும் இந்நேரத்தில் நாங்கள் வழக்கமாக அதை கலந்துவிடுவோம். பையன் ஜெப அட்டைகளைக் கொடுக்கும் போது, அதை வரிசைக் கிரமமாக கொடுக்காமல், அதை கலந்து நீங்கள் அவனிடம் கேட்கும் போது ஒரு அட்டையை உங்களிடம் தருகிறான். அட்டைகள் எல்லாம் கலந்துள்ளன. எனவே எங்கிருந்து கூப்பிடப் போகிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. கூட்டங்களில் முன்பு பங்கு கொண்ட அநேகர் இங்குள்ளனர். அதை கலந்துவிடுவதால், பையன் அதை விற்க முடியாது. ஒரு முறை அப்படி விற்ற பையனை நாங்கள் பிடித்தோம். நாம் அப்படி செய்யக் கூடாது. அவனுக்கும் அவன் கொடுக்கும் அட்டையின் எண் என்னவென்று தெரியாது. ஒருவர், “நீ அட்டையைக் கொடுக்கிறாயே, ஜெப வரிசைக்கு நான் வர முடியுமா?'' என்று கேட்டால், அவனால் சொல்ல முடியாது. முதலாவதாக அட்டைகள் கலந்துள்ளன. அவன் ஒரு அட்டையை உங்களிடம் தருகிறான். எண் என்னவென்று அவனுக்குத் தெரியாது. எனக்கும் நாங்கள் இங்கு வரும்வரை தெரியாது... நான் ஒவ்வொரு வரிசையிலும் இவ்வளவு என்று எண்ணி, அந்த வரிசைகளைப் பிரித்து ஏதாவது ஒரு இடத்திலிருந்து தொடங்குவது வழக்கம். 95ஆனால் இன்றிரவு அம்முறையைக் கையாளப் போவதில்லை. நாங்கள் முதலாம் எண்ணிலிருந்து தொடங்கப் போகிறோம். ஏனெனில் தாமதமாகிவிட்டது. ஜெப அட்டை... நான் எண்ணைச் சொல்லி கூப்பிடும்போது, ஒவ்வொருவராக எழுந்து நில்லுங்கள். உங்களால் எழுந்து நிற்க முடியாவிட்டால், யாராவது உங்களுக்குதவி செய்து உங்களை இங்கு கொண்டு வருவார்கள். இங்குள்ள எத்தனை பேர் வியாதிப்பட்டு, உங்களிடம் ஜெப அட்டை இல்லாமல் இருக்கின்றீர்கள்? நீங்கள் ஜெபம் பண்ணுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 96இப்பொழுது ஜெப அட்டை எண் ஒன்று யார் வைத்திருக்கிறீர்கள்? அங்கு... சீமாட்டியே, இங்கு வருவீர்களா? எண் இரண்டு, யாரிடம் அந்த ஜெப அட்டை உள்ளது? ஏ வரிசை தானே அது? எண் இரண்டு இதோ இங்குள்ள சீமாட்டி. எழுந்து இங்கு வருவீர்களா? எண் மூன்று, இங்கு வாருங்கள். நான்கு, ஐயா இங்கு வாருங்கள். ஐந்து, யாரிடம் ஐந்து உள்ளது? உங்கள் கையையுயர்த்துவீர்களா? அந்த சீமாட்டி. ஆறு, இது இதை விளையாட்டு அரங்கு (arena) இல்லாதபடி செய்கிறது... இது சபை. ஆறு, ஏழு, சரி, எண் எட்டு, சரி உங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எட்டு (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). எட்டு, ஒன்பது, பதினொன்று. பதினொன்றை நான் காணவில்லையே? ஒருக்கால் அது செவிடர் யாராவது இருக்கலாம். உங்கள் பக்கத்திலுள்ளவர்களின் அட்டை எண்ணைப் பார்ப்பீர்களா? பதினொன்று, சீமாட்டியே, உங்களிடம் பதினொன்று உள்ளதல்லவா? உங்கள் கையையுயர்த்துவீர்களா? ஓ, அவர்கள் செவிடு. அது தான். அவர்களைக் கூப்பிடும்போது அவர்கள் அட்டையை கவனியுங்கள். சரி, பதினொன்று கிடைத்துவிட்டது. பன்னிரண்டு, இங்குள்ள சீமாட்டி, பதின்மூன்று, ஜெபஅட்டை பதின்மூன்று; ஜெப அட்டை (ஒரு சகோதரன் சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றார் - ஆசி). சரி, அங்குள்ள சீமாட்டியின் அட்டையைப் பாருங்கள். நீல தொப்பி அணிந்துள்ள அந்த அம்மாள். உங்கள் எண் பன்னிரண்டா? ஓ, பதின்மூன்றா? மன்னிக்கவும்; பதினான்கு சரி. பதினைந்து. அத்தனை பேர்களை தான் நாம் இப்பொழுது எடுத்துக் கொள்ள முடியும். இப்பொழுதே வரிசை நெருக்கமாகிவிட்டது 97இப்பொழுது மீதமுள்ளவர்கள், நீங்கள் ஜெப அட்டை இல்லாதவர்கள், யாராவது முதல் முறையாக இங்கு இருப்பவர்கள் இருக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, இன்றிரவு நீங்கள் இங்கிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியுறுகிறோம். நீங்கள் இதற்கு முன்பு இந்த கூட்டத்தில் இருந்தீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது சரி. நாங்கள் சுகமளிப்பவர்கள் என்று உரிமை கோருகிறதில்லையென்று எல்லோருக்கும் தெரியும். எங்களால் ஜனங்களை சுகப்படுத்த முடியாது. இயேசு அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று மாத்திரமே நாங்கள் வலியுறுத்துகிறோம். இயேசு நமது மத்தியில் இருக்கிறார் என்று நான் அறிந்து, அவரை அடையாளம் கண்டு கொள்வோமானால்! அவர் இங்கு நின்று, உங்கள் கண்களால் அவரைக் காணமுடியுமானால், அது உங்களுக்கு விசுவாசத்தை அளிக்குமா? நிச்சயமாக. ஆனால் அவர் அப்படி இப்பொழுது செய்யமாட்டார். அவர் அப்படி வருவாரானால், காலம் அப்பொழுது முடிவடைந்திருக்கும். அவர் அப்பொழுது நமக்காக வரப் போகிறார். ஆனால் பரிசுத்த ஆவி என்னும் நபர்... இப்பொழுது யாராகிலும் ஒருக்கால் தங்கள் கைகளில் ஆணித் தழும்புகளுடனும், தலையில் முள் முடியுடனும் வந்தால், அவன் போலியே. அவன் ஏமாற்றுபவன். யார் வேண்டுமானாலும் அவ்வாறு ஆள் மாறாட்டம் செய்யக் கூடும். அப்படி யாராகிலும் வந்து, அது கிறிஸ்துவின் ஜீவனை வெளிப்படுத்திக் காண்பிக்காவிட்டால், அது கிறிஸ்துவாகவே இருக்க முடியாது. பாருங்கள்? இப்பொழுது கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட வேண்டும். 98''நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியர் அவர்'' என்று வேதம் கூறுகின்றது. (எபி.4:15). ஜெப அட்டைகள் இல்லாதவர்களே, “நாம் இப்பொழுது ஜெபம் செய்யும் போது, ''ஓ, மகத்தான பிரதான ஆசாரியரே, இயேசு கிறிஸ்துவே; ஆண்டவரும் இரட்சகருமானவரே'' என்று சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் பாவம் ஏதாகிலும் இருக்குமானால், அதை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். ஜெப அட்டை வைத்திருப்பவர்களும் அப்படியே செய்யுங்கள். ஏனெனில் அது பகுத்தறியப்பட்டு, வெளியரங்கமாகும் என்று நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? உங்களில் ஏதாகிலும் தவறு காணப்பட்டு, மேடையின் மேல் அது வெளிப்படையாக அறிவிக்கப்படக் கூடாதென்று நீங்கள் நினைத்தால், வரிசையை விட்டு விலகிவிடுங்கள். ஏனெனில் அவ்வாறு நிகழ்வதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). ஆம் ஐயா. அது இங்கு வெளியாக்கப்படும். எனவே அதை இரத்தத்தின் கீழ் கொண்டு வந்து, என் பாவத்தை மன்னித்து, உம்மை விசுவாசிக்க எனக்குதவி செய்யும் ஆண்டவரே, நான் வியாதிப்பட்டிருக்கிறேன். உமது மகிமைக்கென்று நான் சுகம் பெற விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். பாருங்கள், தேவன் சுகமாக்க வேண்டும் என்பதற்காக சுகப்படுத்துவதில்லை. இல்லை, அவர் தேவனுடைய மகிமைக்கென அப்படி செய்கிறார். நமது பாவங்களையும் அவிசுவாசத்தையும் நாம் அறிக்கையிட வேண்டியவர்களாயிருக்கிறோம். சந்திரரோகத்தில் அவதியுற்றவனை அவன் தகப்பன் கொண்டு வந்த போது, சீஷர்களால் அவனை சுகமாக்க முடியாமல் போய்விட்டது. இயேசு, “நீ விசுவாசித்தால் என்னால் கூடும்'' என்றார். அந்த தகப்பன், ''ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்'' என்றான். பாருங்கள்? அவனுக்குத் தேவையிருந்தபடியால், அவன் கூக்குரலிட்டான். 99அங்குள்ள நீங்கள் தேவனிடம் ஜெபித்து, ''தேவனே, சகோ. பிரான்ஹாமுக்கு என்னைத் தெரியாது. ஆனால் நீர் என்னை அறிவீர் என்று எனக்குத் தெரியும். எனவே நான் உமது வஸ்திரத்தைத் தொட அனுமதியும். ஏனெனில் நீரே பிரதான ஆசாரியர். நீர் சகோ. பிரான்ஹாமின் மூலம் பேசி, இவ்வுலகில் உமது வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயிடம் நீர் கூறினது போல் கூறுவீராக. ஏனெனில் நீர் என் பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய, 'நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர். அன்று போலவே இன்றும் நீர் கிரியை செய்ய வேண்டியவராயிருக்கிறீர்' என்று கூறுங்கள். அன்று அந்த ஸ்திரீ அவரைத் தொட்டு, பின்பு சென்று உட்கார்ந்து கொண்ட போது, எத்தனை பேர் அதை விசுவாசித்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? அது அங்கிருந்த ஜனங்களைக் கவர்ந்தது என்று நினைக்கிறீர்களா? ஒருக்கால் அது கவர்ந்திருக்கக் கூடும் அது அப்படி செய்யும். இந்நாட்களிலுள்ள புறஜாதியராகிய, நாம் இயேசுவுக்கு அவ்வாறே நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும், அதைக் காட்டிலும் அதிக நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். பாருங்கள்? 100இந்த ஸ்திரீ அவரைத் தொட்டுவிட்டு, சென்று உட்கார்ந்து கொண்டாள். இயேசு, ''சற்று பொறுங்கள். என்னைத் தொட்டது யார்? என்னைத் தொட்டது யார்?'' என்று கேட்டார். பேதுரு, “என்ன ஆண்டவரே'' என்று அவரைக் கடிந்து கொண்டான். வேறு விதமாகக் கூறினால், ''இப்படி கேட்பது பைத்தியக்காரத்தனம். உம்மை தீர்க்கதரிசியென்று ஜனங்கள் எண்ணியிருக்கும் போது, இப்படி கேட்பது பைத்தியக்காரத்தனமாய் உள்ளது. உம்மை எல்லோருமே தொடுகிறார்களே. அப்படியிருக்க, 'என்னைத் தொட்டது யார்?' என்று எப்படி கேட்கலாம்?'' என்றான் அவன். அவர், ''அது உண்மை தான். ஆனால் இது வித்தியாசமான தொடுதல். வல்லமை என்னிலிருந்து புறப்பட்டுச் சென்றது'' என்றார். அவர் சுற்று முற்றும் பார்த்து, அந்த ஸ்திரீ யாரென்று அறிந்து கொண்டு, அவளுக்குப் பெரும்பாடு இருந்ததாக கூறினார். அவர், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். அவளுடைய சரீரத்தில் உதிரத்தின் ஊறல் நின்றுவிட்டதை அவள் உணர்ந்தாள். அவர் அதே பிரதான ஆசாரியராக இன்றும் இருக்கிறார். நீங்கள் மாத்திரம் அவரைத் தொடுவீர்களானால்! 101என்னைத் தொடுவதனால் எவ்வித பயனும் இல்லை. நான் உங்கள் கணவர், சகோதரர், தகப்பன் போல் ஒருவன். போதகர்களில் ஒருவரைத் தொடுவதும் அதே விளைவைத் தரும். பாருங்கள், நீங்கள் அவரைத் தான் தொட வேண்டும். தொடப்பட வேண்டிய அவரே. எனக்கு உங்களைத் தெரியாது. உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உங்களைத் சுகப்படுத்த முடியாது. என்னால் கூடுமானால், நான் நிச்சயம் செய்வேன். ஆனால் என்னால் முடியாது. அவர் ஏற்கனவே செய்து முடித்த ஒன்றை என்னால் செய்ய முடியாது. அவர் இங்கு நின்று கொண்டிருப்பாரானால், உங்கள் மத்தியில் அவர் இருப்பதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். அதை சற்று யோசித்து பாருங்கள். நாம் இப்பொழுது எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். அதை நம்மால் உணர முடிகிறது. சரியான வழி ஒன்றும் தவறான வழி ஒன்றும் உள்ளது, வெவ்வேறு வழிகள் “இதுவே வழி, அதுவே வழி'' என்று கூறுகின்றன. ஆனால் சரியான வழி ஒன்று எங்காவது இருக்க வேண்டும். 102நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை நியாயந்தீர்க்கப் போகிற அதே தேவன் உங்கள் மத்தியில் வந்து இங்கு உங்களுடன் நின்று கொண்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, “இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே நான் இருக்கிறேன்'', நான் முன்பு செய்த கிரியைகள். ''அவர் மறுபடியும் அதை செய்வார். அவ்வாறே அவர் வாக்களித்துள்ளார். எருசலேமிலும், யூதேயாவிலும், நியூயார்க் பட்டினத்திலும், உலகம் முழுவதிலும் நீங்கள் என்க்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.'' நீங்கள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்து ஜெபம் செய்து கொண்டிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். சந்தேகப்பட வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றோடும் (ஆவி, ஆத்துமா, சரீரம்) விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் உங்களுக்கு அருளுவார். சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். 103வானத்தையும் பூமியையும் படைத்த மகத்தானவரே, இன்றிரவு நான் கூறின அனைத்தும் உண்மையென்று நீர் நிருபிக்காவிட்டால், அது உபயோகமற்றதாகிவிடும். நாங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜனங்களும் அதிகம் கேள்விப்பட்டிருக்கின்றனர். பிதாவே, உம்மிடமிருந்து வரும் ஒரே வார்த்தை இவைகளை சரிபடுத்திவிடும். அதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். நீர் மனித உதடுகளின் மூலம் மாத்திரமே பேசுவீர் என்றறிவோம். மனிதனை உமது பிரதிநிதியாக வைத்திருக்கிறீர். ஒரு நாள் நீர் நின்று கொண்டு வயலைப் பார்த்து விட்டு, “அது அறுப்புக்கு ஆயத்தமாயுள்ளது'' என்றீர். ''அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றீர். (மத். 9:38). நீரே அறுப்புக்கு எஜமான். ஆனால், நீரும் மனிதனும் இணைந்து செயல்பட வேண்டுமென்று உமது குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளீர், மனிதனில்லாமல் நீர் எதையுமே செய்வதில்லை. தேவனே, என்னை மாத்திரம் நீர் அபிஷேகித்து, இந்த சபையோருக்கு, விசுவாசத்தையூட்ட அவர்களை நீர் அபிஷேகிக்காமல் விட்டுவிட்டால், அதனால் எவ்வித பயனும் இராது. சகோதரர், சகோதரிகள் என்னும் முறையில், நாங்கள் எல்லோருமே ஒரே குழுவாக இருப்பது அவசியம். தேவனே, எங்களை ஒருமித்து அபிஷேகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அப்பொழுது நாங்கள் நித்தியத்தின் இப்புறத்தைக் கண்டு, சாலொமோனிலும் பெரியவரான மகத்தான கர்த்தராகிய இயேசு இங்கிருக்கிறார் என்பதைக் கண்டு கொள்ள ஏதுவாகும். அவரின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 104கூடுமானவரை பயபக்தியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் (பியானோ இசைப்பவர், 'நம்பிடுவாய்' என்னும் பாடலை இசைக்கிறார் - ஆசி). என்றாவது ஒரு நாளில் நான் மரிக்க நேரிட்டு, என்னைக் கல்லறையில் அடக்கம் செய்யும் போது, இந்த பாடலை அவர்கள் இசைப்பார்கள், நான் போய்விட்டேன் என்று நீங்கள் கேள்விப்பட்டால், நான் மரித்துவிட்டதாக நம்ப வேண்டாம். நான் மரிக்கவில்லை. இந்த செய்தியை நீங்கள் வானொலியில் கேட்டு, அல்லது செய்தித்தாளில் படிக்கும் போது, எங்காவது நின்று கொண்டு இந்த பாடலைப் பாடுங்கள். (பாடுவீர்கள் அல்லவா?) 'நீ நம்ப மாத்திரம் செய்' என்பதை நினைவு கூருங்கள். 105இந்த ஜெப வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களில் ஒருவரையும் நான் அறியேன். இங்குள்ள ஒவ்வொருவரும் எனக்குத் தெரியாதவர்கள். உங்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. அதை ஆமோதிப்பவர்கள் உங்கள் கைகளையுயர்த்தி அதை தெரியப்படுத்துங்கள். ஒருக்கால் நீங்கள் வியாதிப்பட்டிருக்கலாம், அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஒருக்கால் அது பணப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது குடும்பப் பிரச்சினையாயிருக்கலாம் எனக்குத் தெரியாது. இங்குள்ள சீமாட்டி சற்று அருகில் வாருங்கள். நன்றி, இந்த ஸ்திரீ என்னைக் காட்டிலும் எவ்வளவோ இளையவள். எங்கள் இருவர் பிறப்பின் இடையே அநேக ஆண்டுகள் கடந்திருக்கும். இதுவே எங்கள் முதல் சந்திப்பு. ஏதோ ஒரு காரணத்தினால் அவள் இங்கிருக்கிறாள். எனக்குத் தெரியாது. ஒருக்கால் அது வியாதியாக இருக்கலாம். அவளுடைய கோளாறு என்னவென்று எனக்குத் தெரியாது. அது எதுவாயிருப்பினும் தேவன் அதை அறிவார். அவர் அதை வெளிப்படுத்துவாரானால், அது உண்மையா இல்லையாவென்று அவள் அறிந்து கொள்வாள். 106ஒருக்கால் இந்த சீமாட்டி, ''சகோ. பிரான்ஹாமே, நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன்... என் வயிறு எனக்கு தொல்லை தருகிறது. எனக்கு வலி ஏற்படுகிறது என்று கூறுவாளானால்; அவள் ஆரோக்கியமுள்ளவளாகக் காணப்படுகிறாள். ஆனால் அதை வைத்து நாம் சொல்லி விட முடியாது. நான், ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்'' என்று வேதம் கூறுகிறது என்று சொல்வேன். அந்த விதமாகத் தான் சகோ. ஓரல் ராபர்ட்ஸ், சகோ. ஆலன் போன்றவர்கள் அவளுக்கு ஜெபம் செய்திருப்பார்கள். அதுவே அவர்களுடைய ஊழியம். அவர்கள் அவள் மேல் கை வைத்து, “சாத்தானே, இயேசுவின் நாமத்தில் உன் பிடியை விடு. சாத்தானே, உன்னை கடிந்து கொள்கிறேன்'' என்று அது போன்ற ஏதாவதொன்றை கூறியிருப்பார்கள். ''நீ சுகமடைந்துவிட்டாய், சென்று வா'' என்று கூறியிருப்பார்கள். அவள் அதை விசுவாசிக்க வேண்டும். அது சரிதான். 107ஆனால் அவளுக்குள் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட பாவம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு காலன் (gallon) எண்ணெயை அவள் மேல் ஊற்றி அநேக முறை அபிஷேகித்து, மேலும் கீழும் குதித்து கூக்குரலிட்டாலும், பிசாசு அங்கேயே இருக்கும் அறிக்கை செய்யாத பாவம். அவனை நீங்கள் அங்கிருந்து அசைக்கவே முடியாது. இல்லை, ஐயா. ஆனால் பரிசுத்த ஆவி இறங்கி வந்து, அவள் செய்த ஒன்றை வெளிப்படுத்திக் கூறுவாரானால், அது சரியா இல்லையா என்று அவளுக்குத் தெரியும். ஏற்கனவே நடந்த ஒன்று பிழையின்றி வெளிப்படுத்தப்படுமானால், இனி நடக்கப் போவதை உரைப்பது உண்மையாகலே இருக்கும். அது சரிதானே? அது தான் நமது அருமையான ஆண்டவரின் தயவு. அவர் இந்த கடைசி நாட்களில் தமது மணவாட்டியை ஒன்று சேர்க்க முயன்று கொண்டிருக்கிறார். அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற அவர் அப்படிப்பட்ட ஒன்றை செய்வார் என்று எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்கள்? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) உங்கள் விசுவாசத்திற்காக தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! நான் வேதத்தில், இந்த ஒன்றை கூறுவதை நீங்கள் கண்டால், அதை நீங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும். பாருங்கள்? எனக்குக் கடிதம் எழுதி அல்லது போதகர்களில் ஒருவரிடம் கூறி, நான் எங்கு தவறு செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரிவியுங்கள். நான் தவறு செய்ய விரும்பவில்லை. நான் சரியாக இருக்க விரும்புகிறேன். அது தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். 108இப்பொழுது பரி. யோவான் 4 ஐ மறுபடியும் பார்ப்போம். இங்கு ஒரு மனிதனும் ஸ்திரீயும் முதன் முறையாக சந்திக்கின்றனர், நமது ஆண்டவரும், சமாரியா ஸ்திரீயும். அவர்கள் முதன் முறையாக சந்தித்தனர். இயேசு அவள் கோளாறு என்னவென்று அறிந்து கொள்ளும் வரை, அவளுடன் சிறிது நேரம் பேசினார். அவளுடைய கோளாறு அவள் நடத்தை கெட்டவள் என்பதே. அவளுடைய கோளாறு என்னவென்று அவர் எடுத்துரைத்த போது, அவர் தீர்க்கதரிசியென்பதை அவள் உடனே கண்டு கொண்டாள். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருகிறாரென்று அறிவேன். அவர் வரும்போது, இதை தான் அவர் செய்வார்'' என்றாள். இயேசு, “நானே அவர்'' என்றார். பாருங்கள்? நேற்றைய ஜனங்களிடம் அவர் இவ்வாறு தம்மை அடையாளம் காண்பித்திருந்தால், அவர் இன்றும் மாறாதவராயிருப்பாரானால், அதே விதத்தில் அவர் இன்றும் தம்மை அடையாளம் காண்பிக்க வேண்டியவராயிருக்கிறார். பரிசுத்த ஆவி அதை அவளுக்கு வெளிப்படுத்துவாரானால், அது ஆவிக்குரிய வழியில் ஏற்பட்டது என்பதை அவள் கண்டு கொள்வாள். அது மாமிசப் பிரகாரமாக வரமுடியாது. பாருங்கள்? அது ஆவிக்குரிய விதமாகவே வர வேண்டும். அவள் பரிசேயரைப்போல், “அது பெயல்சபூல்'' என்றால், அது அவளைப் பொறுத்த விஷயம். அவள், ”அது கிறிஸ்து'' என்பாளானால், அது அவளுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள விஷயம். 109இப்பொழுது பயபக்தியாயிருங்கள். நான் அந்த அபிஷேகத்திற்காக சிறிது நேரம் காத்திருக்கிறேன். அதற்காகவே நான் தாமதித்துக் கொண்டிருக்கிறேன். அது வராமலும் கூட இருக்கலாம். அப்படி நேர்ந்தால், நாம் தலை வணங்கி ஜெபம் செய்து கூட்டத்தை முடித்துவிட்டு, நாளை இரவு மறுபடியும் வந்து அவரைக் கேட்போம்... அவர் இதுவரை எனக்குத் தவறியதேயில்லை.. லட்சக்கணக்கானவர் கூடியிருந்த போது. அவர் தவறியதேயில்லை. இம்முறையும் அவர் தவறமாட்டார் என்றறிவேன். அவர் தவறமாட்டார் என்று எனக்குத் தெரியும். கூட்டத்தை முடிக்க வேண்டிய நேரத்தைக் காட்டிலும் தாமதமாகிவிட்டது என்பது என் மனதிலுள்ளது. உங்களுக்கு... நாம் அவசரப்படக் கூடாது. பரிசுத்த ஆவி நம்மூலம் கிரியை செய்யும்போது, நாம் பொறுத்திருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இந்த அரங்கத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமானால், அதை நான் செலுத்திவிடுகிறேன். அவ்வளவு தான். சாத்தானே, நீ அப்படி பொய் சொல்ல முடியாது. 110நான் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு, இங்குள்ள ஒவ்வொரு ஆவிக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன். இப்பொழுது... இந்த சிறு சீமாட்டியிடம் பேசப் போகிறேன். சகோதரியே, பரிசுத்த ஆவி... இயேசு சமாரியா ஸ்திரீயின் ஆவியைப் பகுத்தறிந்து, என்ன கோளாறு என்று அறிந்துகொள்ள ஆவலுடன் சிறிது நேரம் பேசினார். அதற்காகத்தான் அவர் அப்படி செய்தாரென்று நினைக்கிறேன், பிதா அவரை அங்கு அனுப்பினார். அவர் சமாரியா நாட்டின் வழியாகப் போக வேண்டியதாயிருந்தது அவர் அங்கு அடைந்த போது, அங்குள்ளது மாத்திரம் அவருக்குத் தெரியும். அங்கு ஒரு ஸ்திரீ வருகிறாள். அது தான் சமயம் என்று அவர் அறிந்து கொண்டார். 111இப்பொழுது பிதா என்னை இங்கு அனுப்பினார். நான் நியூயார்க் பட்டினத்தில் இதோ இருக்கிறேன். நீ இங்கிருக்கிறாய். நீயே மேடையின் மேல் வந்துள்ள முதலாம் நபர், எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு அவர் வெளிப்படுத்தித் தருவார். அவர் அப்படி செய்வாரானால், அது உன்னை முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கச் செய்யுமா? நீ ஏற்றுக் கொள்வாயா? அது உண்மையா இல்லையாவென்று உனக்குத் தெரியும். உன்னை எனக்குத் தெரியாது. நான் உனக்கு அந்நியன். ஆனால் உன் கோளாறோ... உனக்கு அநேக கோளாறுகள் உள்ளன. ஆனால் நீ ஜெபம் செய்ய வந்துள்ள உன் முக்கிய கோளாறு உன் தொண்டை சம்பந்தமானது. உனக்குத் தொண்டை கோளாறு உள்ளது. அது சரியா? அப்படியானால் உன் கையை உயர்த்து நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). சிறிது நேரம், அது சரியாகிவிடும். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அதை ஊகித்திருப்பீர்கள்'' எனலாம். இல்லை, நான் அப்படி செய்வதில்லை. நான் வந்துள்ளவர்களின் ஆவியை கிரகித்துக் கொள்கிறேன். ''அவர்தான் அதை ஊகிப்பவர்''. 112இப்பொழுது சிறிது நேரம் தனிமையில் அவருடன் பேசலாம். ஏதோ ஒன்று நிகழ்கின்றது என்பதை நீ அறிந்திருக்கிறாய். இப்பொழுது சபையோரிடம், எத்தனை பேர் கர்த்தருடைய தூதனின் படத்தை அந்த ஒளியை கண்டிருக்கிறீர்கள்? அது வாஷிங்டன் டி.சி.யில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதே ஒளி இப்பொழுது அவள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. உங்களால் அதை காண முடியவில்லையா? இப்பொழுது அபிஷேகம் இங்குள்ளது. என்னால் அதை காண முடிகின்றது, அது அவள் மேல் உள்ளது. ஆம், அது தான். அவளுடைய கோளாறு தொண்டையில் உள்ளது. அவள் அதைக் குறித்து கவலை கொண்டிருக்கிறாள். தொண்டையில் அவளுக்கு கட்டி (tumor) தோன்றியுள்ளது. அது முற்றிலும் உண்மை. அது மாத்திரமல்ல, உனக்கு தைராய்டு (thyroid) கோளாறும் ஏற்பட்டு உனக்கு தொல்லை கொடுக்கிறது. அது சரியா? பாருங்கள்? சரி, இயேசு கிறிஸ்து இங்கு நின்று கொண்டு, உன்னையும் உன்னைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று இப்பொழுது விசுவாசிக்கிறாயா? அவரை உனக்கு சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்கிறாயா? (சகோதரி, அப்படியே செய்வேன் என்கிறாள் - ஆசி) சென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்தை பெற்றுக்கொள். அந்த வரிசை, பாருங்கள், சற்று பாருங்கள். அவருக்கு எல்லாம் தெரியும். 113வாலிப சீமாட்டியே, எப்படியிருக்கிறாய்? நீ சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறாய். அந்த சீமாட்டி மேடையின் மேல் வந்தவுடனே, அந்த ஒளியும் அவள் மேல் வந்துவிட்டது. பாருங்கள்? அவளுக்கு அது தெரியும். கவனியுங்கள். இந்த பெண்ணை எனக்குத் தெரியாது. அவளைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. அவள் இங்கு வாலிபப் பெண்ணாக நின்று கொண்டிருக்கிறாள். நீ தேவனிடத்தில் விரும்புவது என்னவென்று பரிசுத்த ஆவி எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால்! நீ ஒரு கிறிஸ்தவள், அப்படி இல்லாதிருந்தால் அவர் அதை என்னிடம் கூறியிருப்பார். நீ ஒரு கிறிஸ்தவள், அதாவது உண்மையான கிறிஸ்தவள். அவரிடம் நீ விரும்பிக் கேட்பது என்னவென்று அவர் எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது ஊழியக்காரன் என்று விசுவாசிப்பாயா? இதை நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் நேரம் வரும், பாருங்கள், நீ விசுவாசிப்பாயா? (சகோதரி 'ஆமென்' என்கிறாள் - ஆசி). நான் உனக்கு அந்நியன் என்று உனக்குத் தெரியும். உனக்காக நீ இங்கு வரவில்லை. நான் வயதான ஒரு ஸ்திரீயைக் காண்கிறேன். அது உன் தாய். (சகோதரி, 'ஆம்' என்கிறாள் - ஆசி). அவள் இங்கில்லை. அவளைக் குறித்து நீ மிகவும் கவலை கொண்டிருக்கிறாய். அவள் புற்று நோயால் அவதிப்படுகிறாள். அவளுடைய நிலைமையைக் குறித்து நீ கலக்கமுற்றிருக்கிறாய். வாலிப சீமாட்டியே, பரிசுத்த ஆவி தாம் இதை வெளிப்படுத்துகிறார் என்று விசுவாசிக்கிறாயா? (“ஆமென்'') உன் பர்சிலுள்ள (Purse) கைகுட்டையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல், உன் தாயைக் காணும் போது, இன்றிரவு ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் ஞாபகார்த்தமாய் அதை அவள் மேல் வை... அல்லது அதை அவளுக்கு அனுப்பி வை. உன் இருதயத்தில் சந்தேகப்படாதே. இயேசுவை விசுவாசி... (சகோதரி சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றாள் - ஆசி). ஆம், அந்த அந்தகாரம் அவளை விட்டு சென்றுவிடும். அவள்... நீ சரியாகிவிடுவாய். இப்பொழுது புறப்பட்டுச் செல். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக! என் சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக! உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? சந்தேகப்பட வேண்டாம், விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 114சற்று நேரம் பொறுங்கள், சற்று நேரம் என்னை மன்னியுங்கள். ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஏதோ ஒன்று இங்கு பிரத்தியட்சமானது. இங்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட அந்த சீமாட்டி எங்கிருக்கிறாள்? ஓ, ஆமாம். அது சரி. சிறிது நேரம் பொறுங்கள், ஒரு வினாடி பரிசுத்த ஆவி... வேறு யாரோ இங்கு வந்துள்ளவர். பாருங்கள், அது அந்த ஒளி. அது... ஆம், அது இங்கு அமர்ந்துள்ள கறுப்பு நிறமுள்ள சீமாட்டி. ஆம், நீ அங்கு உட்கார்ந்து கொண்டு, சுகம் பெறுவதற்காக ஜெபம் செய்து கொண்டிருந்தாய். நான் உனக்கு அந்நியன். உன்னை எனக்குத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன் உயர்ந்த இரத்த அழுத்தம் உன்னை விட்டு சென்று, நீ சுகமடையப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா? அதற்காகத்தான் நீ ஜெபம் செய்து கொண்டிருந்தாய். பாருங்கள்? ஆமென். அவள் எதை தொட்டாள்? அவள் என்னைத் தொடமுடியாது. அவள் எனக்கு அதிக தூரத்தில் இருக்கிறாள். நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய அந்த பிரதான ஆசாரியரை அவள் தொட்டாள். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், பாருங்கள், நீங்கள் மேடையின் மேல் வர வேண்டுமென்கிற அவசியமில்லை. நீங்கள் அங்கேயே இருக்கலாம். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். அதை தான் நான் உங்களிடம் கேட்கிறேன். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 115ஒரு சீமாட்டி பின்னால் உட்கார்ந்து கொண்டு, அந்த பக்கம் பார்த்துக் கொண்டு ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்காக அவள் ஜெபம் செய்யவில்லை. அவளுக்கு அருமையான ஒருவருக்காக அவள் ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது மேடையை விட்டு சென்ற அந்த சீமாட்டி அவளுடைய அருமை தாயாருக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தாள். இவளோ அவள் தந்தைக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். அலைபாயும் கடலை நான் காண்கிறேன். அவர் அயல் நாட்டினர்; நார்வேயைச் சேர்ந்தவர். அது முற்றிலும் உண்மை. வாலிப சீமாட்டியே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. உன் தந்தை சுகம் பெறுவார். அவள் எதை தொட்டாள்? என்னைத் தெரியுமா என்று அவளிடம் கேட்டுப் பாருங்கள். அதற்காகத் தான் நீ ஜெபம் செய்து கொண்டிருந்தாயா? அது உண்மையானால், உன் கையை ஆட்டு. அது உண்மை. நாம் அந்நியர்கள். அது உண்மையா? அது உண்மை. சரி, நீ மாத்திரம் விசுவாசித்தால், உன் வேண்டுகோள் நிறைவேறும். இருபது கெஜம் தூரத்திலுள்ள அவள் எதை தொட்டாள்? அவள் பிரதான ஆசாரியரை தொட்டாள், என்னையல்ல. எனக்கு அவளைத் தெரியாது. ஆனால் அவள் பிரதான ஆசாரியரை தொட்டாள், இன்றிரவு நம்மோடுள்ள அந்த அழகான கர்த்தராகிய இயேசுவை. நீ ஒரு அந்நியன். அதுதான் வியாதியஸ்தரா? அதுதான் அந்த நபரா? 116பாருங்கள், நான் அந்த ஒளியைப் பின் தொடர வேண்டியவனாயிருக்கிறேன். அப்படி தான் அது என்னை வழி நடத்துகிறது. பாருங்கள், அது இந்த ஸ்திரீயை தேர்ந்தெடுத்தது போல். அவள் அவர் மூலமாய் தேவனைத் தொட்டாள். வெளியில் நின்று கொண்டிருப்பவர்களும் கூட அதை தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தேவனைத் தொடுகின்றனர். பாருங்கள், அந்த ஒளி யாருடன் தொடர்பு கொள்கின்றதோ, அந்த பாதையில் நான் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். உன்னை எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் உன்னை நான் கண்டதில்லை. நாம் அந்நியர். நாம் அந்நியர் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. எனக்குத் தெரியாமல், உனக்கு தெரிந்துள்ள ஒன்றை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், அது இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையின் மூலமாகவே நடந்திருக்க வேண்டும். தெய்வீக சுகமளித்தல் உனக்கு தெய்வீக சுகமளித்தல் வேண்டுமானால்... அது தான் உனக்கு வேண்டுமோ என்று எனக்குத் தெரியாது. சில நேரங்களில் அது வேறு யாருக்காவது இருக்கலாம், அல்லது குடும்பப் பிரச்சினையோ, பணப் பிரச்சினையோ இருக்கலாம். அவர் எல்லாவற்றையும் அளிக்க முடியும். உன் தேவை என்னவென்று அவர் அறிந்திருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்துவார். அவர் அப்படி எனக்கு வெளிப்படுத்தினால், அது அவர் என்று நீ அறிந்து கொள்வாய், பார், அது அவராகத்தான் இருக்க வேண்டும். அது உங்கள் அனைவரையும் விசுவாசிக்க செய்யுமா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). சரி விசுவாசியுங்கள். இவள் மிகவும் நல்லவளாகத் தோன்றுகிறது. சற்று நேரம் அவளுடன் பேசுவோம். 117அந்த ஒளி கூட்டத்திற்கு சென்றுவிட்டது. யாரோ. ஒருவர்... மிகவும் பயபக்தியாயிருங்கள். அது விசுவாசத்தின் மகத்தான இழுப்பு. அந்த வல்லமை! என்னால் உணர முடிகின்றது. நான் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பிரசங்கித்தேன். நான் பத்து மணி நேரம் பிரசங்கிப்பதைக் காட்டிலும் நான் காணும் ஒரு தரிசனம் என்னை பலவீனமாக்கிவிடுகிறது. வல்லமை! 'வல்லமை' (virtue) என்றால் 'பெலன்'. பாருங்கள், நீங்கள் தான் அதை செய்கிறீர்கள். நானல்ல. இந்த தரிசனங்கள் என் காரணமாகத் தோன்றுவதில்லை. நீங்களே அதற்கு காரணம். நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசமே அந்த தரிசனங்களை நான் பெறக் காரணமாயுள்ளது. நானல்ல, நான் தேவனின் பிரதிநிதியாய் இங்கு இருக்கிறேன். இந்த ஒலிப்பெருக்கியை எடுத்துக் கொள்வோம். அதனால் பேச முடியாது. ஒரு சத்தம் அதில் பேச வேண்டும். அது தானாகவே பேசாது. அது போன்று தான் நானும், என்னால் பேச முடியாது. ஜீவிக்கிற கிறிஸ்துவே பேசுகிறவர். பேசுகிறவர் அவரே. நீங்கள் யாரென்றும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் அவருக்குத் தெரியும். 118இந்த சீமாட்டியிடம் நாம் மறுபடியும் பேசுவோம். உன் வாழ்க்கையில் நேர்ந்த ஒன்றை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்துவாரானால்... அவரிடத்தில் நீ கேட்டுக் கொண்டதை. நீ விசுவாசியாயிருப்பதனால், அவரிடத்தில் ஏதோ ஒன்றைக் கேட்டிருக்கிறாய். அவர் அதை எனக்கு வெளிப்படுத்தித் தந்தால், அதை நீ பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசிக்கிறாயா? (சகோதரி, 'ஆம்' என்கிறாள் - ஆசி). நீ, விசுவாசிப்பாய் அல்லவா? உனக்கு வயிற்றுக் கோளாறு (ஆம்) மருத்துவ பரிசோதனையின் போது உன் வயிறு சரிந்துவிட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது ('ஆம்'). அது சரியா? ('ஆம்'). பரிசோதனையின்போது வேறொன்றும் கூட கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது உன் வயிற்றில் கட்டி (tumor) என்று. ('ஆம்'). நீ யாரென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தக் கூடும் என்று விசுவாசிக்கிறாயா? (“ஆம்''), திருமதி வில்லர்ட், வீட்டிற்கு சென்று விசுவாசி. 119உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி), அந்த சீமாட்டியைக் கேட்டுப் பாருங்கள். நாங்கள் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை. அது பரிசுத்த ஆவி. அவர் இங்கிருக்கிறார். மிகவும் பயபக்தியாயிருங்கள். நமக்கு போதிய நேரம் உள்ளதா என்று கூறுங்கள். பாருங்கள், அங்கே (தெளிவில்லாத வார்த்தைகள்). ஐயா, எப்படியிருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். ஒரு நாளில் நாம் தேவனை சந்திக்க வேண்டுமென்று நீங்கள் உணருகிறீர்கள். நீர் எனக்கு அந்நியன், நானும் உமக்கு அந்நியன் என்னும் நிலையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உமது தொல்லைகளை எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், அது அவர் என்று விசுவாசிப்பீர்களா? நான் ஒரு மனிதன். அவை என்னவென்று எனக்குத் தெரியாது. அவரால் அதை வெளிப்படுத்தித் தர முடியும். அது சரியா? இதை கூற எனக்குப் பிரியமில்லை, அந்த பையனின் மேல் நிழல் காணப்படுகிறது. அந்தகாரம் அவன் மேல் தங்கியிருக்கின்றது. அவனுக்கு மோசமான ஒன்றுள்ளது. உனக்கு புற்றுநோய் உள்ளது. அது உண்மை, எக்ஸ்ரே படம் எடுத்து பார்த்ததில், வயிற்றிலும் வயிற்றின் சுவர்களிலும் புற்றுநோய் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது சரியா? அந்த எக்ஸ்ரே படத்தை நான் தரிசனத்தில் காண்கிறேன், அது வயிற்றின் சுவரில், அப்படியானால் நீ வேகம் மரிக்க வேண்டும். இல்லையென்றால், தேவன் உனக்குதவி செய்வாராக. என் சகோதரனே, அதை ஏற்றுக் கொள்வாயா? இயேசு கிறிஸ்துவுக்கு புற்றுநோய் ஒரு பொருட்டல்ல, தலைவலி எவ்வாறு அவருக்கு ஒன்றுமற்றதாய் உள்ளதோ, அது போன்று தான் இதுவும். நீ விசுவாசிக்கிறாயா? ஏதோ ஒன்று உனக்குள் நேர்ந்துள்ளது. இப்பொழுது நல்லுணர்வு உனக்கு ஏற்பட்டுள்ளது, அப்படி விசுவாசித்துக் கொண்டேயிருப்பாயானால் அந்த நிழல் உன்னை விட்டுப் போய்விட்டது. பார்? உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. விசுவாசித்து செல். தேவன் உன்னை சுகமாக்குவார். 120தேவன் கீல் வாதத்தை (arthritis) குணமாக்க முடியும். அதை நீ விசுவாசிக்கிறாயா? ('ஆமென்'). சரி, ''கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல்லி நடக்கத் தொடங்கு. ''நீ விசுவாசித்தால்! விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்''. சரி. நான் 'கீல் வாதம்' என்று சொன்னவுடன் நீ அதிசயமுற்றாய். அது தான் உன்னை பாதிக்கிறது. காலையில் உன்னால் எழுந்திருக்க முடியவில்லை. அது உன்னை விரைப்பாக (stiff) ஆக்கிவிடுகிறது. நீ விசுவாசித்தால் அது உன்னை விட்டுப் போய்விடும் நீ சென்று விசுவாசி. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக நீ விசுவாசித்துக் கொண்டிரு. ஆஸ்துமா நிலை அங்கே. தேவன் அதை சுகப்படுத்துவாரென்று விசுவாசிக்கிறாயா? ('ஆமென்'). அவரை ஏற்றுக் கொள், இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார்... உன் முழு இருதயத் தோடும் விசுவாசி. உன் இரவு உணவை அனுபவித்து உண்ண உனக்கு விருப்பமா? உன் வயிற்றுக் கோளாறு போய்விட்டது. சென்று குணமாகு. விசுவாசித்து செல். நீ விசுவாசித்தால்! 121தேவனால் முதுகு கோளாறை சுகமாக்க முடியும். அதை நீ விசுவாசிக்கிறாய் அல்லவா? உன் முதுகு கோளாறை அவர் சுகமாக்க வல்லவர் என்று விசுவாசிக்கிறாயா? நீ சென்று, “ஆண்டவரே, உமக்கு நன்றி'' என்று சொல்லி களி கூரு. நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது ஊழியக்காரன் என்று விசுவாசிக்சிறாயா? தேவன் இருதய நோயை சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் விசுவாசித்து செல். உனக்கு மாதவிடாய் தொந்தரவு ஒரு பக்கமும், கீல் வாதமும் உள்ளது, அது சரியா? அவர் சுகமளிக்கும் தேவன் என்று விசுவாசிக்கிறாயா? அவரை சுகமளிப்பவராக ஏற்றுக் கொள். “ஆண்டவரே, உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் செல். உனக்கு வெகு நாட்களாக மாதவிடாய் தொந்தரவு உள்ளது. உனக்கு இருதய நோயும் உண்டு. அது உன்னைக் கொல்லப் பார்க்கிறது. இருதயம் இரத்தத்தை மெல்ல 'பம்ப்' (Pump) செய்கிறது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. இனி ஒரு போதும் அது தொந்தரவு தராது. விசுவாசித்துச் செல். 122இரத்த சோகை. தேவன் அதை குணப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீரிழிவு வியாதி உன்னை இனிமேல் தொந்தரவு செய்யாது என்று விசுவாசித்து செல். உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அங்கு உட்கார்ந்திருப்பவரே, அவர் உன்னை சுகப்படுத்திவிட்டார் என்று விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை பரிபூரணமாக குணமாக்குவார் என்று விசுவாசி. களிகூர்ந்து செல், ஆமென். அந்த முதுகு கோளாறு உன்னை மறுபடியும் தொந்தரவு செய்யாது. அது குணமானால், உனக்கு நல்லுணர்வு உண்டாகும் அல்லவா? சரி, ''கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் செல். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. உன் இரத்தத்தில் இரத்தம் சொட்டுகிறது. நீரிழிவு, தேவன் நீரிழிவு நோயை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? இரத்தம் உடலில் செலுத்தப்பட நாம் கல்வாரிக்குச் செல்வோம். அவர் அதை உன்னிலிருந்து எடுத்துப் போடுவார். உனக்கு மார்வலி உள்ளது. இல்லையா? சில நிமிடங்களுக்கு முன்பு உன்னை நான் கூப்பிடப் போனேன். நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய், நான் உன்னைப் பார்த்தேன்? என் கண்களில் நீ பட்ட மாத்திரத்தில், நீ கீழே பார்க்கத் தொடங்கினாய். ஒரு வினோத உணர்ச்சி உன்னில் ஏற்பட்டது. மார்வலி உன்னை விட்டுப் போய்விட்டது. உன் மாரை அடைக்கும் நரம்பு சம்மந்தமான ஒரு வியாதி அது. நீ விசுவாசிக்கிறாயா. 123அந்த வரிசையின் மூலையில் உட்கார்ந்து கொண்டு கீல் வாதத்தினால் அவதியுறுபவரே, அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ விசுவாசிக்கிறாயா? எழுந்து நில், இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி உங்களுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). சரி, நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். அவர் தவறமாட்டார் . அவர் தேவன் அழகான கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது உயிர்த்தெழுந்த வல்லமையுடன் தம்மை அடையாளம் காண்பிக்கிறார். நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். 124பரலோகப் பிதாவே, சத்துரு ஓட்டம் பிடிக்கிறான். சத்துரு தோற்றுவிட்டான், இயேசு கிறிஸ்து ஜீவித்து அரசாளுகிறார். ஓ, தேவனே, இரக்கம் கொண்டு ஜனங்களுக்கு சுகமளிப்பீராக! சாத்தானே, நீ யுத்தத்தில் தோற்றுப் போனாய் இன்றிரவு இந்த அரங்கத்தில் இயேசுகிறிஸ்து வெற்றி பெற்றுவிட்டார். நீ அம்பலமானாய். நீ பொய்காரன். கல்வாரியின் அன்பினிமித்தம் உன் கரத்தைப் பிடித்து உன்னை வெளியேற்றுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன் பிடியைத் தளர்த்தி, இந்த ஜனங்களை விட்டு வெளியே வா!